Skip to content

Xiaomi Redmi K30S With Triple Rear Cameras

Xiaomi Redmi K30S With Triple Rear Cameras

64 எம்பி கேமராவுடன் REDMI K30S ஸ்மார்ட்போன் அறிமுகம்:

சியோமி(Xiaomi) நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய REDMI K30S  ஸ்மார்ட்போன்(Smartphone) மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. REDMI K30S  ஸ்மார்ட்போன்(Smartphone) கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.

Xiaomi Redmi K30S With Triple Rear Cameras

 ஸ்மார்ட்போன் சைஸ்  Smartphone Size:

REDMI K30S  ஸ்மார்ட்போன்  6.67 இன்ச் FHD  பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டது.பின்பு  2400×1080 பிக்சல்(pixel),144 Hz Refresh Rate,HDR 10 பிளஸ் மற்றும் 20:9  என்ற திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டது இந்த ஸ்மார்ட்போன்.

Xiaomi Redmi K30S With Triple Rear Cameras

 ஸ்னாப்ட்ராகன் 865 பிராசஸர் வசதி:

இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்த  குவால்காம் ஸ்னாப்ட்ராகன்  865 பிராசஸர் வசதி உள்ளது.மேலும் அட்ரினோ 650 GPU ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன்(Smartphone)   வெளிவந்துள்ளதால் கேமிங் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் நன்றாக இருக்கும்.ஆண்ட்ராய்டு  10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் போன் மாடல்.

 ஸ்மார்ட்போனின்  64 MP பிரைமரி லென்ஸ்:

REDMI K30S ஸ்மார்ட்போனின்  64MP டைமரி லென்ஸ்+13MP அல்ட்ரா வைடு லென்ஸ்+5MP மேக்ரோ லென்ஸ் என மொத்தம் 3 கேமராக்கள்(Triple Rear Cameras) பொருத்தப்பட்டுள்ளன.மேலும்   20MP செல்பி கேமரா(selfie camera),LED பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

8GB  ரேம் மற்றும்  128GB/256GB   உள்ளடக்கியுள்ள மெமரி:

இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும்128ஜிபி/256 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அம்சத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.அதாவது மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

Xiaomi Redmi K30S With Triple Rear Cameras

5000MAH  பேட்டரி:

REDMI K30S ஸ்மார்ட்போனில் 5000MAH  பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் fast  சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.5G,Wifi,802.11Ax, BlueTooth 5.1,Dual 4G  volt,GPS,NFC,USB Type C உள்ளிட்ட பல்வேறு இணைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது  இந்த ஸ்மார்ட்போன்.

இந்திய மதிப்பில் இந்த ஸ்மார்ட்போனின் விலை:

8GB  ரேம் மற்றும்  128 ஜிபி மெமரி கொண்ட REDMI K30S ஸ்மார்ட்போனின் விலை  ரூபாய்  28,000 ஆகும்.

8GB  ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட REDMI K30S ஸ்மார்ட்போனின் விலை ரூபாய்   30,810  ஆகும்.

Xiaomi Redmi K30S With Triple Rear Cameras

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *