Skip to content

World’s Biggest Flower Titan Arum

World's Biggest Flower Titan Arum

பெல்ஜியத்தில்(Belgium) உள்ள மீசே தாவரவியல் பூங்காவில்(Meise Botanic Garden) உலகின் மிகப்பெரிய பூ (world’s largest flower) டைட்டன் ஆரம்(Titan Arum)மலர்ந்திருக்கிறது.கொரோனா வைரஸ்(Coronavirus) காரணமாக தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் இந்த பூ பூக்கும் அரிய நிகழ்வை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியாமல் போனது.இந்தப் பூவானது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மையுடையது.

World's Biggest Flower Titan Arum

டைட்டன் ஆரம் Titan Arum :

டைட்டன் ஆரம் உலகின் மிகப்பெரிய பூக்களில் ஒன்று. இந்தோனேஷியாவின் மழைக்காடுகளில் இந்த பூ அதிகமாக காணப்படுகிறது.1878 ஆம் ஆண்டில் தாவரவியலாளர் ஒடோர்டொ பெக்காரி  இந்த டைட்டன் ஆரம் பூவை சுமித்ரா தீவு பகுதியில்  கண்டுபிடித்தார்.

World's Biggest Flower Titan Arum

டைட்டன் ஆரம் 20 அடி உயரம் வளரும் தன்மை உடையது. 130 கிலோ எடை உடையது இந்த பூ.15 அடி அகலத்துக்கு குடை போன்ற அமைப்பை கொண்டது.இந்த செடியின் இலைகள் சூரியனிடமிருந்து  ஆற்றலைப் பெற்று தண்டுப் பகுதியில் சேமித்து வைத்துக் கொள்ளும்.12 to 18 மாதங்களில் இந்த செடியின் இலைகள் அனைத்தும்  இறந்த நிலைக்கு சென்றுவிடும்.மணியை கவிழ்த்து வைத்தது போல் இந்தப் பூவின் அமைப்பு காணப்படும்.

World's Biggest Flower Titan Arum

செடியின் இலைகள் உதிரும் போது  மொட்டு உருவாகும்.மொட்டு வளர்ச்சியின் வேகம் விரைவாக நடைபெறும்.பூ மலரும் போது மடலில் இருந்து வெப்பம் வெளியேறும்.அந்த சமயத்தில் அழுகிய  விலங்கின் சடலத்திலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தை போன்ற துர்நாற்றம்  வெளிவரும்.இந்த நாற்றத்தின் மூலம் வண்டுகள், பூச்சிகளைக் கவர்ந்து மகரந்த சேர்க்கை நிகழ்கிறது.இந்தப் பூ 72 மணி நேரம் பூ பூத்த  நிலையிலே காணப்படும்.

World's Biggest Flower Titan Arum

 

அதனுடைய தண்டிலிருந்து பெரி போன்ற பழங்கள் உருவாகும்.இந்த பழங்கள் ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு என்று நிறமாற்றம் அடையும்.இந்த பழத்தில் உள்ள விதைகள் இருவாட்சி  என்ற பறவையின் மூலம் பரப்பப்பட்டு புதிய செடிகள் வளரும்.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை  இந்த செடியில் பூக்கள் தோன்றும்.இந்த டைட்டன் ஆரம் 4  அல்லது 6  வரையில் பூக்களை கொடுத்து விட்டு  மடியும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *