Table of Contents
பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுப் பொருள்கள்
பாலுடன்(milk) சில உணவுப்பொருட்களை ஒரு போதும் சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும். பாலுடன் ஏன் சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பற்றி பார்க்கலாம். பாலை பலரும் சூடாகவோ அல்லது குளிராகவும் குடிக்க விரும்புவர். சிலர் பாலுடன் சாக்லேட் கலந்து குடிப்பார்கள். அவ்வாறு பாலுடன் சில உணவுப்பொருட்களை சேர்த்து குடிப்பது தவறானது. பால்(milk) ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சிலருக்கு பாலில் உள்ள லாக்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. பாலுடன் சில உணவுப்பொருட்களை ஒரு போதும் சேர்க்கவே கூடாது. அதனால் உடலுக்கு தீங்கு ஏற்படும்.
பால்-மீன்
பால் குளிர்ச்சித் தன்மை கொண்டது. ஆனால் மீன் வெப்பத் தன்மை கொண்டது. இவை இரண்டும் சேர்ந்து கலவையானது உடலில் ரசாயன மாற்றங்களை உண்டாக்கும். உடலின் சமநிலையை பாதிக்கும். மீன் மட்டுமில்லாமல் இறைச்சி வகைகளையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் செரிமான பிரச்சனைகள் உண்டாகலாம்.
பால்- வாழைப்பழம்
பாலுடன்(milk) வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும் பழக்கம் பொதுவாக அனைவரிடத்திலும் உள்ளது. ஆனால் அப்படிச் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். பால் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது ஜீரணமாவதற்கு நீண்ட நேரம் ஆகும். இதன் காரணமாக சோர்வு உண்டாகும். பால் மற்றும் வாழைப்பழம் இரண்டும் சத்தான பொருட்கள் என்றாலும் தனித்தனியே சாப்பிடுவது தான் நல்லது.
பால்- முலாம்பழம்
பாலுடன் நிறைய பழங்களை கலந்து சாப்பிடுவது மற்றும் ஜூஸாக குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். பால் மலமிளக்கியாக செயல்படக்கூடியது. பாலுடன் முலாம் பழத்தை சேர்ப்பது நல்லது அல்ல. முலாம் பழத்தில் டையூரிடிக் பண்பு உள்ளது. பாலையும் முலாம் பழத்தை சேர்ப்பது செரிமான பிரச்சனை உண்டாக்குவதோடு, உடலில் நச்சுத் தன்மையும் உண்டாக்கும். அவ்வாறு சேர்த்து சாப்பிடுவதால் வாந்தி உண்டாகும்.
பால்- முள்ளங்கி
முள்ளங்கி பெரிய அளவில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. ஆயுர்வேதத்தின் படி, முள்ளங்கி சாப்பிட்ட பிறகு பால் குடிக்க கூடாது. ஏனென்றால் அவை பொருந்தாத உணவுக் கலவையாக கருதப்படுகிறது. அவ்வாறு சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். முள்ளங்கியில் செய்த உணவுப்பொருட்களை சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து பால் குடிக்கலாம்.
பால்- சிட்ரஸ் பழங்கள்
பாலுடன் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. வைட்டமின் சி நிறைந்த பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. பால் ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் ஆகும். பால் சிட்ரஸ் அல்லது எலுமிச்சை பழங்களை ஒன்றாக சேர்க்கும்போது பால் நொதித்து விடும். அவ்வாறு சேர்த்து சாப்பிடும்போது வாய் மற்றும் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். சிலருக்கு சளி, இருமல், நெஞ்செரிச்சல், தடிப்புகள், ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம்.