பறக்கும் கேமரா உள்ள ஸ்மார்ட்போன் உருவாக்கும் விவோ:
விவோ(Vivo)நிறுவனம் புதுவிதமான ஸ்மார்ட்போன்(Smartphone) ஒன்றை உருவாக்கி வருகிறது.விவோ நிறுவனம் டிரோன்செயல்பாடுகள் கொண்ட பறக்கும் கேமரா உடன் கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருகிறது.இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா டிரோன்(Drone) போன்ற பறக்கும் தன்மை கொண்டுள்ளதாக உருவாக்கப்படுகிறது.
விவோ(Vivo) நிறுவனம் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் இந்த ஸ்மார்ட்போனுக்காக விண்ணப்பித்துள்ளது.பறக்கும் கேமரா கொண்ட ஸ்மார்ட் போன்(Smartphone) பார்ப்பதற்கு சாதாரண ஸ்மார்ட் போன் போல் காட்சியளிக்கும்.
ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவை பறக்க வைப்பதற்காக 4 ப்ரோப்பெல்லர்கள் உள்ளது.இதற்காக தனியாக பேட்டரி வழங்கப்படுகின்றது. இந்த கேமரா மாடலில் இரண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்பட உள்ளது.டிரோன் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.