Table of Contents
எலும்புகளை பாதுகாக்கும் விட்டமின் டி சத்துள்ள உணவுகள்:
விட்டமின் டி(Vitamin D) சத்து எலும்புகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விட்டமின் டி சத்து குறைந்தால்(Vitamin D deficiency) உடலில் முதுகு வலி, மூட்டு வலி மற்றும் தசை வலி, உடல் சோர்வு,மன அழுத்தம் அதிகரித்தல், முடி உதிர்வு போன்றவை ஏற்படும். விட்டமின் டி சத்து அதிகமாக குறையும் போது கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. விட்டமின் டி சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மேலே சொன்ன நோய்கள் வராமல் தடுக்கலாம்.
முட்டை
முட்டையில் புரோட்டீன் சத்து மட்டுமல்லாமல் விட்டமின் டி(Vitamin D) சத்தும் அதிக அளவில் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் கால்சியம் அதிக அளவில் உள்ளது.விட்டமின்டி குறைபாட்டை சரி செய்ய முட்டை சாப்பிடுவது நல்லது.
பால்
பாலில் கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்து அடங்கியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிப்பது விட்டமின்டி சத்துக் குறைபாட்டை சரிசெய்ய உதவும்.
கீரை
கீரைகள் புரதச்சத்து மட்டுமல்லாமல் விட்டமின் டி சத்தும் நிறைந்துள்ளது. கீரை விட்டமின் டி மட்டுமல்லாது பல ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய உதவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரை சாப்பிடுவது சிறந்தது.
பனீர்
பனீரில் கால்சியம் மட்டுமல்லாது விட்டமின் டி(Vitamin D) சத்தும் நிறைந்துள்ளது. ஆகவே எலும்புகளை பலப்படுத்த பனீரை உணவில் சேர்க்கலாம்.
சோயாபீன்
சோயாபீன் இல் புரதம், கால்சியம், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, வைட்டமின் பி, துத்தநாகம், ஃபோலேட், செலினியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் உள்ளன. இது எலும்புகளை பலப்படுத்துவது மட்டுமன்றி ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை வராமல் தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் சோயாபீன் சேர்க்கலாம்.