Skip to content

Vijay Tv Vijayadhasami Special BigBoss Season 4 Tamil Day 22 Promo

Vijay Tv Vijayadhasami Special BigBoss Season 4 Tamil Day 22 Promo

விஜய் டிவியின் ஸ்பெஷல் விஜயதசமி ப்ரோக்ராம் பிக்பாஸ் தான்:

நேற்றைய பிக்பாஸ் (BigBoss)நிகழ்ச்சியில் ஆஜித் தன்னுடைய எவிக்சன் ஃப்ரீ பாஸ் பயன்படுத்தி Save ஆகிவிட்டார்.இன்று விஜயதசமி( Vijayadhasami )என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி நேரம் ஆனது நாலு மணி நேரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதல் முறையாக தொடர்ச்சியாக நாலு மணி நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.இன்று மாலை 6.30 முதல் இரவு 10.30 வரை ஒளிபரப்பாக உள்ளது.அதன் அறிவிப்பு தான் புதிய ப்ரோமோ ஆகும்.

Vijay Tv Vijayadhasami Special BigBoss Season 4 Tamil Day 22 Promo

விஜயதசமி ஸ்பெஷல்:

இன்று விஜய் டிவியின் விஜயதசமி ஸ்பெஷல் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.பிக்பாஸ் வீட்டில் நாடா அல்லது காடா டாஸ்க் நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக நகரமா,கிராமமா என ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டத்தை கொண்டாட உள்ளனர்.பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து இதைச் செய்யும் பிரமோ தற்போது வெளியாகியுள்ளது.

பாலாஜி கொடுத்த முள் கிரீடம்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் Rio க்கு கிரீடத்தை கொடுத்த பாலாஜி அவர்களின் குரூப் பற்றி மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு கொம்பு மற்ற கிரீடம் டாஸ்க் கொடுத்தார் கமல். இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருமே தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு கிரீடத்தையும் பிடிக்காதவர்களுக்கு கொம்பு கொடுத்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி  Rio வுக்கு கிரீடத்தை கொடுத்தார்.ஆனால் அதற்கு அவர் கொடுத்த விளக்கம் வேற லெவலில் இருந்தது.குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் குரூப்பிசம் உள்ளது என்பதையும் ரியோவும் அவருடைய குரூப் பையும் குறிப்பிட்டு கிரீடத்தை கொடுத்தார்.

பாலாஜி பேசியது என்னவென்றால், இந்த கிரீடத்தை நான் ஏன் ரியோக்கு கொடுக்கிறேன் என்றால் அவர் இந்த வீட்டில் ஒரு நாலைந்து பேரை சம்பாதித்து வைத்துள்ளார்.என்னால் அப்படி நான்கு அல்லது 5 பேரை சம்பாதிக்க முடியவில்லை.அந்த 5 பேரும் எப்படிப்பட்டவர்கள் என்றால், எங்கள் ஆள் மீது கை வைத்தால் உன்னை என்ன செய்கிறேன் பார் என்ற ரீதியில் நடந்துகொள்வார்கள்.இப்படிப்பட்ட ஆட்களை சம்பாதித்து வைத்துள்ள ரியோவுக்கு இந்த கிரீடத்தை கொடுக்கிறேன் என்றார்.பாலாஜி கொடுத்த விளக்கத்தை கேட்ட கமல் சிரித்தபடியே இது முள் கிரீடம் போலிருக்கிறதே என்றார் அவரைத் தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் க்கு கொம்பை கொடுத்தார் பாலாஜி.பாலாஜியின் விளக்கத்தைக் கேட்ட ரசிகர்கள் நீ வேற லெவல் என பாராட்டி வருகின்றனர்.

Promo 1

Promo 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *