எல்லாம் முடிந்துவிட்டது – “800” படம் குறித்து விஜய் சேதுபதி பேட்டி:
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான “800” ல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக உறுதி அளித்து இருந்தார். ஆனால் அந்தப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. பல்வேறு கருத்துக்கள் அந்தப்படத்தைப் பற்றி வந்தபோதிலும் விஜய் சேதுபதி அதில் நடிப்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு “800” படத்திலிருந்து விலகுமாறு வேண்டுகோள் விடுத்து Tweet செய்தார். அந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி விஜய் சேதுபதி’ நன்றி, வணக்கம்‘ என்று குறிப்பிட்டிருந்தார்.
நன்றி, வணக்கம்:
தற்போது முதலமைச்சரின்(Edappadi K. Palaniswami) தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்திவிட்டு முதலமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் சேதுபதி செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் நன்றி, வணக்கம் என்றால் என்ன என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு விஜய் சேதுபதி நன்றி, வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் பொருள் என்று தெரிவித்தார்.
“800” படத்தில் நடிப்பது குறித்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு விஜய் சேதுபதி இந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார். மேலும் 800 படம் குறித்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது, இனி பேச எதுவும் இல்லை என்று விஜய் சேதுபதி கூறினார்.
நன்றி.. வணக்கம் 🙏🏻 pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020