Skip to content

Top 5 Remedies For Grey Hair In Tamil

Top 5 Remedies For Grey Hair In Tamil

வெள்ளை முடி கருப்பாக மாற இதை ட்ரை பண்ணுங்க:

வாழ்க்கை முறை மாற்றத்தின் மோசமான விளைவுகளில் ஒன்று வெள்ளை முடி(Grey Hair).இளம் வயதில் நரைத்த முடி என்பது நீங்கள் போதிய ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளவில்லை என்பதன் அறிகுறி, மேலும் கெமிக்கல் கலந்த ஷாம்பூ(shampoo), ஹேர் ஆயில்(Hair oil) போன்றவற்றை பயன்படுத்துவதும் இளம் வயதிலேயே நரை முடியை உண்டாக்கும்.

வெள்ளை முடி கருப்பாக மாற டிப்ஸ்:

1.வெங்காயம்(Onion) முடி உதிர்வை தடுப்பதோடு மட்டுமன்றி, வெள்ளை முடியையும் போக்கும் தன்மையுடையது. அதற்கு வாரம் ஒரு முறை வெங்காயத்தை அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் ஷாம்பு(shampoo) போட்டு அலச வேண்டும்.

2.நரை முடி(Grey Hair) மறைய வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தடவ வேண்டும். இன்னொரு முறை, இரவு தூங்குவதற்கு முன் வெந்தயத்தை(Fenugreek) நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை எடுத்து தலையை அலசி வந்தால் நாளடைவில் நரை முடி அனைத்தும் கருமையாக மாறும்.

3. கேரட் ஜூஸ்(carrot juice) தினமும் குடித்து வருவதன் மூலம் வெள்ளை முடியை தடுக்கலாம்.மேலும் கேரட் ஜூஸ் முடி ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள உதவும்.ஆகவே உங்களுக்கு முடி பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டுமானால் கேரட் ஜூஸ் குடியுங்கள்.

4. நெல்லிக்காய் பொடியுடன்(Amla powder), எலுமிச்சை சாற்றினை(Lemon Juice) சேர்த்து கலந்து ஸ்கால்ப்பில்(Scalp) படும்படி தடவி மசாஜ் செய்தபின், குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நரை முடி அனைத்தும் கருமையாக மாறும்.

5. தேங்காய் எண்ணெயில்(Coconut oil), எலுமிச்சை சாற்றினை(Lemon juice) சேர்த்து கலந்து தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தலைமுடி கருமை ஆவதோடு மட்டுமல்லாமல், தலை முடி பிரச்சனைகள்(Hair Problems) நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published.