ஸ்கரப்(Scrub) செய்வது முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டது.ஸ்க்ரப் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மையை நீக்கலாம்.ஸ்கரப்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்க முகத்தை பொலிவாக்க உதவும். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஸ்கரப் செய்யலாம்.சுகர் ஸ்க்ரப்(Sugar Scrub)செய்வதன் மூலம் உடல் முழுவதும் பொலிவுடன் இருக்கும்.பல்வேறு வகையான சுகர் ஸ்க்ரப் பற்றி பார்க்கலாம்.
Table of Contents
Top 5 HomeMade Sugar Scrubs
1.Coffee Sugar Scrub:
காபித்தூள் சுகர் ஸ்க்ரப்(Coffee Sugar Scrub)கால்களில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவான சருமத்திற்கு உதவும்.
காபித்தூள் சுகர் ஸ்க்ரப் செய்முறை Coffee Sugar Scrub:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் ஒரு ஸ்பூன் காபித்தூள் பவுடரை சேர்க்கவும்.பின்பு ஒரு ஸ்பூன் சுகர் சேர்க்கவும். பின்னர் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் நெய்(Ghee) சேர்க்கவும்.இவை அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட்(Paste) போல் செய்யவும்.இந்த பேஸ்ட்டை கால்கள், தொடை போன்ற பகுதிகளில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும்.பத்து நிமிடங்கள் கழிந்த பிறகு தண்ணீரால் கழுவவும்.சருமம் பொலிவுடன் காணப்படும்.
2.Cinnamon Sugar Lip Scrub:
பட்டை சுகர் ஸ்க்ரப் உதட்டை பொலிவுடன் வைக்க உதவும்.
பட்டை சுகர் ஸ்க்ரப் செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும்.அந்த கிண்ணத்தில் அரை ஸ்பூன் சுகர் சேர்க்கவும்.பின்பு சிறிதளவு தேன் சேர்க்கவும்.பின்னர் நெய் சிறிதளவு சேர்க்கவும்.சிறிதளவு தேங்காய் எண்ணெயும் சேர்க்க வேண்டும்.பின்னர் சிறிதளவு பட்டைத்தூள் சேர்க்க வேண்டும்.பின்னர் இவை அனைத்தையும் கலந்து பேஸ்ட் போல் செய்யவும்.பின்பு அந்த பேஸ்டை உதட்டில் தைக்க வேண்டும்.10 நிமிடங்கள் கழித்து உதட்டை தண்ணீரால் கழுவ வேண்டும். உதடு மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.
3.Orange(or)Lemon Sugar Scrub:
இந்த சுகர் ஸ்க்ரப் உடலில் இருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களை நீக்கி உடல் பொலிவுடன் இருக்க உதவும்.
ஆரஞ்சு அல்லது லெமன் சுகர் ஸ்க்ரப் செய்முறை:
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் ஒரு ஸ்பூன் சுகர் சேர்க்கவேண்டும்.பின்பு சிறிதளவு ஆரஞ்சு ஜூஸ் அல்லது லெமன் ஜூஸை சேர்க்க வேண்டும்.பின்னர் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்(Coconut oil) சேர்க்க வேண்டும்.பின்னர் இவை அனைத்தையும் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்ய வேண்டும்.இந்த பேஸ்ட்டை உடலில் தேய்த்து ஸ்கரப் செய்தால் சருமம் பொலிவுடன் காணப்படும்.
4.Green Tea Sugar Scrub:
இந்த சுகர் ஸ்க்ரப் உடலில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி உடல் பொலிவுடன் இருக்க உதவும்.
கிரீன் டீ சுகர் ஸ்க்ரப் செய்முறை:
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும்.பின்னர் அரை ஸ்பூன் சுகர் சேர்க்கவேண்டும்.பின்பு ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்க்க வேண்டும்.பின்பு ஒரு ஸ்பூன் கிரீன் டீ சேர்க்க வேண்டும்.பின்பு இவை அனைத்தையும் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்ய வேண்டும்.அந்த பேஸ்ட்டை உடலில் தேய்த்து ஸ்கரப் செய்தால் உடலிலுள்ள இறந்த செல்கள் நீங்கி உடல் பொலிவுடன் மின்னும்.
5.Cucumber Sugar Scrub:
இந்த சுகர் ஸ்க்ரப் உடலில் இருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களை நீக்கி உடல் பொலிவுடன் இருக்க உதவும்.
வெள்ளரிக்காய் சுகர் ஸ்க்ரப் செய்முறை:
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் அரைத்த வெள்ளரிக்காய் மற்றும் புதினா கலவையை சேர்க்கவும்.பின்பு இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் சுகர் சேர்க்கவேண்டும்.இவை அனைத்தையும் நன்கு கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்ய வேண்டும். பின்பு இந்த பேஸ்டை தேய்த்து கழுவினால் உடல் முழுவதும் பொலிவுடன் காணப்படும்.
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே உடலழகை மெருகேற்றலாம். இவை அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் என்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.