Skip to content

Top 5 Home Remedies For Lice Problem In Tamil

Top 5 Home Remedies For Lice Problem In Tamil

பேன் தொல்லையை இயற்கையான முறையில் எப்படி சரி செய்வது?

முடி வளர்ச்சி(Hair growth) அதிகம் உள்ளவர்களுக்கும், கூந்தலை சரியாக பராமரிக்காத வர்களுக்கும் பேன்(Lice) அதிகம் வரும் வாய்ப்புள்ளது. தலைமுடியில் ஈரம், அழுக்கு, பிசுபிசுப்பு போன்றவை இருந்தால் பேன் தொல்லை கண்டிப்பாக வரும். ஒருவர் பயன்படுத்திய டவல், சீப்பு, ஹேர் பிரஷ் போன்றவற்றை எடுத்து பயன்படுத்தினாலும் அதன் வழியாக நமக்கு பேன் தொல்லை ஏற்படும். மேலும் ஒரே தலையணையில்(pillow) பக்கத்தில் தலை வைத்து படுப்பது போன்ற காரணங்களால் பேன் தொல்லை ஏற்படுகிறது.

பேன் தொல்லையை இயற்கை முறையில் சரி செய்ய உதவும் வழிமுறைகள்:

  • வெங்காயச்சாறு(onion juice), எலுமிச்சைச்சாறு(lemon juice) இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த கலவையை பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு தடவ வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும். தலையை அலசும் போது பேன்(Lice) தானாக வெளியேறிவிடும்.
  • வேப்ப எண்ணெயுடன்(Neem oil), தேங்காய் எண்ணெய்(coconut oil) கலந்து தலையில் தடவ வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் தேய்த்துக் குளித்து வந்தால் பேன் தொல்லை நீங்கும். மேலும் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு(dandruff) நீங்கும்.
  • குப்பைமேனி இலையை அரைத்து, சாறெடுத்து தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு செய்து வர பொடுகு தொல்லை, பேன்(Lice)  தொல்லை நீங்கும்.
  • வேப்பிலையை அரைத்து தலையில் தடவ வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால்  பேன்  தொல்லை நீங்கும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்து வரலாம்.
  • சீதாப் பழக்கொட்டையை(Custard apple seed)  வெயிலில் காயவைத்து, மிக்ஸியில் அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி அந்த எண்ணெயை எடுத்து வைத்த வேண்டும். இந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பேன்  தொல்லை நீங்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை ,தலையில் தேய்த்து வந்தால்  பேன் தொல்லை நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published.