Skip to content

Top 5 Hair Growth Herbs

Top 5 Hair Growth Herbs

இன்றைய சூழலில் முடி வளர்ச்சியின்மை, முடி உதிர்தல்(HairFall), இளநரை(Grey Hair), வழுக்கை ஏற்படுதல் போன்றவை பெரும்பாலோருக்கு இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை.மாறிவரும் உணவு பழக்கவழக்கம், கெமிக்கல் கலந்த ஹேர் டை(Hair Dye), கெமிக்கல் கலந்த ஹேர் ஆயில்(Hair oil) போன்றவை  முடியின் வளர்ச்சியை பாதிக்கின்றன.இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளை(Herbs) பயன்படுத்துவதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.முடி வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள் பற்றி பார்க்கலாம்.

Top 5 Hair Growth Herbs

 

முடி வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள் Hair Growth Herbs:

1. பொடுதலை Poduthalai:

தலையிலுள்ள பொடுகை(Dandruff) சரிசெய்யும் தன்மை கொண்டதால் இந்த மூலிகை பொடுதலை என்றழைக்கப்படுகிறது.

பொடுதலை இலைச்சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

பொடுதலை தலையிலுள்ள பொடுகைப் போக்க  உதவுவதோடு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும்.

Top 5 Hair Growth Herbs

2. மருதாணி Henna:

மருதாணி  ‘ஹென்னா’ (Henna) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பழைய காலங்களில் மருதாணி தான் முடி பராமரிப்புக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

பெண்கள் மருதாணி இலையை நன்றாக அரைத்து  தலையில் தேய்த்து முடி வளர்ச்சிக்கு  பயன்படுத்தி வந்தனர்.

முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சி அதிகரிக்கும் தன்மை மருதாணிக்கு உண்டு.

பொடுகு பிரச்சினைக்கு மருதாணி சிறந்த தீர்வளிக்கும்.

மருதாணி இளம் வயதில் ஏற்படும் நரைமுடி பிரச்சனையை சரிசெய்ய உதவும்.

Top 5 Hair Growth Herbs

3. கரிசலாங்கண்ணி False Daisy:

கரிசலாங்கண்ணி பிரிங்க ராஜா(Bhringaraja) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.இன்று கடைகளில் விற்கப்படும் கூந்தல் தைலங்களில்(Hair oil) கரிசலாங்கண்ணி கூந்தல் தைலம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

கரிசலாங்கண்ணி(Karisilangkanni) முடியை  என்றும் இளமையுடன் நீளமாக வளர வைக்க உதவுதல் காரணமாக கரிசலாங்கண்ணி என்று அழைக்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணி முடி வழுக்கை வராமல் தடுக்க பெரிதும் உதவும்.

நரை முடியை கருமையாக மாற்றும் தன்மை கரிசலாங்கண்ணி உண்டு.

முடி உதிர்வை தடுத்து முடி அடர்த்தியாக வளர வைக்க கரிசலாங்கண்ணி உதவும்.

Top 5 Hair Growth Herbs

4. கற்றாழை  Aloevera:

கற்றாழை கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.கற்றாழை ஜெல்லில் உள்ள  புரோடியோலிடிக் என்சைம்ஸ் இறந்த செல்களை நீக்கி முடி வளர்ச்சிக்கு உதவும்.

கற்றாழை ஜெல் கூந்தலை பட்டுப் போன்று மென்மையாக மாற்றும் தன்மை உடையது.

கூந்தல் உதிர்வை தடுக்க கற்றாழை உதவும்.

பொடுகு பிரச்சனை சரி செய்யவும் கற்றாழை உதவும்.

கற்றாழையில் உள்ள சத்துக்கள் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

Top 5 Hair Growth Herbs

5. செம்பருத்தி Hibiscus:

செம்பருத்தி செடியின்  இலை, பூ, வேர்  என செம்பருத்தி செடி முழுவதுமே மருத்துவ பயனுடையது.

செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும் தன்மை உடையது.

செம்பருத்திப் பூ மற்றும் இலை முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் வளர வைக்க உதவும்.

முடி அடர்த்தியை அதிகரிக்க செம்பருத்தி உதவும்.

பொடுகை போக்கவும் செம்பருத்தி உதவும்.

நரைமுடி பிரச்சனையை சரி செய்யவும் செம்பருத்திப்பூ உதவும்.

தலை அரிப்பை தடுக்கவும் செம்பருத்தி உதவும்.

Top 5 Hair Growth Herbs

மேலே சொன்ன இந்த ஐந்து மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *