விட்டமின் சி(Vitamin C) என்பது நீரில் கரையும் விட்டமின்.விட்டமின் சி யின் இன்னொரு பெயர் அஸ்கார்பிக் அமிலம்.வைட்டமின் சி யில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடென்ட்(Anti oxidants) உள்ளது.உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும் தன்மை விட்டமின் சிக்கு உண்டு.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க விட்டமின் சி உதவும்.
விட்டமின் சி சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஜலதோஷம், வைரஸ் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க விட்டமின் சி உதவும்.
உடல் இளமையுடன் இருப்பதற்கு கொலாஜன் தேவை. கொலாஜன் உற்பத்தியை தூண்ட விட்டமின் சி உதவும்.
விட்டமின் சி (Vitamin C) சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான உடல் நலத்தை பெற முடியும்.
விட்டமின் சி (Vitamin C) சத்து நிறைந்துள்ள காய்கறிகளின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
Table of Contents
1. பிரக்கோலி:
பிரக்கோலியில் வைட்டமின் சி (Vitamin C) சத்து அதிக அளவில் உள்ளது.
உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பிரக்கோலி உதவும்.
பிரக்கோலியில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
பிரக்கோலி எலும்பை பலப்படுத்த உதவும்.
புற்றுநோய் வராமல் தடுக்க பிரக்கோலி உதவும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பிரக்கோலி உதவும்.
பிரக்கோலி சாப்பிடுவதன் மூலம் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும் பிரக்கோலி சாப்பிடுவதால் முகம் பளபளப்பாக இருக்கும்.
2. குடைமிளகாய்:
குடைமிளகாயில் விட்டமின் சி (Vitamin C) அதிகளவில் உள்ளது.
மஞ்சள் குடைமிளகாய் மற்றும் சிவப்பு குடைமிளகாயில் அதிக அளவில் விட்டமின் சி உள்ளது.
குடைமிளகாயில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
3. நெல்லிக்காய்:
நெல்லிக்காயில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது.நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
நெல்லிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலையும் ரத்தத்தையும் சுத்தம் செய்யும்.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி என்றும் இளமையுடன் இருக்க உதவும்.
4. பச்சை பட்டாணி:
பச்சை பட்டாணி உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.
இதயத்தை பாதுகாக்க பச்சைப்பட்டாணி உதவும்.
உடல் எடையை குறைக்க பச்சை பட்டாணி உதவும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பச்சைப்பட்டாணி உதவும்.
பச்சை பட்டாணியில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்றும் இளமையான தோற்றத்தை தக்க வைக்க உதவும்.
5. முட்டைக்கோஸ்:
முட்டைக்கோஸில் அதிக அளவில் விட்டமின் சி(Vitamin C) உள்ளது.
முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை நோய்கள் தாக்காமல் பாதுகாக்கும்.
புற்றுநோய் வராமல் தடுக்க முட்டைகோஸ் உதவும்.
உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் உதவும்.
முட்டைக்கோஸ் சருமத்தை பொலிவோடு வைக்க உதவும்.
6. உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் உள்ள விட்டமின் சி உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
இளமையான தோற்றத்திற்கு உருளைக்கிழங்கில் உள்ள விட்டமின் சி உதவும்.
7. தக்காளி:
புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை தக்காளியில் உண்டு.
இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த தக்காளி உதவும்.
உடல் என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்க தக்காளி உதவும்.
8. காலிபிளவர்:
காலிபிளவர் உடலிலுள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை உடையது.
புற்றுநோய் வராமல் தடுக்க காலிபிளவர் உதவும்.
உடல் எடையை குறைக்கவும் காலிபிளவரை உதவும்.
9. முருங்கைக்கீரை:
முருங்கைக்கீரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதயநோய் வராமல் தடுக்க முருங்கைக்கீரை உதவும்.
உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற முருங்கைக்கீரை உதவும்.
புற்றுநோய் வராமல் தடுக்க முருங்கைக்கீரை பெரிதும் உதவும்.
10. வெள்ளரிக்காய்:
ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வெள்ளரிக்காய் உதவும்.
உடல் எடை குறைக்க வெள்ளரிக்காய் உதவும்.
நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லது.
விட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கலாம்.
இது பல உணவுகளில், குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது.
இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும், தோல் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கும் நன்கு அறியப்பட்டதாகும்
விட்டமின் C பல உணவுகளில், குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது.இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும், தோல் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கும் நன்கு அறியப்பட்டதாகும்