அல்வா(Halwa) என்ற பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வா.அதிலும் திருநெல்வேலியில் கிடைக்கும் இருட்டுக்கடை அல்வா(Tirunelveli iruttu kadai halwa )மிகவும் சுவையானது.இந்த இருட்டுக்கடையானது திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இருட்டு கடை அல்வா(iruttu kadai halwa)தோன்றிய வரலாற்றை பார்க்கலாம்.
திருநெல்வேலி இருட்டு கடையின் வரலாறு:
1940 ல் ராஜஸ்தானை சார்ந்த பிஜிலி சிங் என்பவரால் தான் இந்த இருட்டுக்கடை அல்வா தொடங்கப்பட்டது.பின்பு அவருடைய தலைமுறை வாரிசுகளால் இந்த இருட்டுக்கடை அல்வா(iruttu kadai halwa) நடத்தப்பட்டு வருகிறது.
இருட்டு கடை பெயர் காரணம்:
இருட்டு கடை ஆரம்பித்த சமயத்தில் ஒரே ஒரு விளக்கு மட்டும் பயன்படுத்தி உள்ளனர்.மாலை வேளை என்பதால் ஒரு காண்டா
விளக்கு இருந்தாலும் இருட்டாகத்தான் இருந்துள்ளது.கடை இருட்டாக இருந்த காரணத்தால் இந்த கடை இருட்டு கடை என்று அழைக்கப்பட்டது.
இருட்டுக்கடை அல்வாவின் ருசிக்கு காரணம்:
அல்வா தயாரிக்க பயன்படும் கோதுமையை அவர்கள் மிஷினில் அரைக்காமல் கைகளால் அரைப்பது மற்றும் கைகள் மூலமாகத் தான் அல்வாவை கிண்டுவது தான் அதன் சுவைக்கு முக்கிய காரணம்.மேலும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரும் அல்வாவின் சுவையை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.கைகள் மூலம் அல்வா கிண்டபடுவதால் தினமும் குறிப்பிட்ட அளவு மட்டுமே தயார் செய்கின்றனர்.
இருட்டு கடை திறக்கும் நேரம்:
தினமும் மாலை 5.30 மணிக்கு இந்த கடை திறக்கப்படுகிறது.ஆனால் மக்கள் நாலு மணியிலிருந்து கடைக்கு முன்பாக வரிசையில் நிற்க தொடங்கிவிடுகின்றனர்.எட்டு மணிக்கு முன்பாக அல்வா முழுவதும் விற்று தீர்ந்து விடும்.
திருநெல்வேலி இருட்டு கடை அல்வா(Tirunelveli Iruttu kadai Halwa)செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை – 200 கிராம்
சீனி(Sugar) – 700கிராம்
நெய் – தேவையான அளவு
நெய்யில் வறுத்த முந்திரி – தேவையான அளவு
செய்முறை:
கோதுமையை எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.அடுத்த நாள் கோதுமை நன்கு ஊறியதும் பின்பு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.கோதுமை நன்றாக அரைந்து பாலாக மாறும்.அரைத்த கோதுமையை வடிகட்டி கோதுமை பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு அகன்ற பாத்திரத்தில் கோதுமை பாலை ஊற்றவும்.கோதுமை பால் கொதித்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.கோதுமை பாலும் சர்க்கரையும் நன்றாகக் கலந்து கட்டியான பதத்திற்கு வரும் வரை தொடர்ந்து கிளறவும்.கட்டியான பதத்திற்கு வந்ததும் நெய் சேர்க்க வேண்டும்.பின்பு வறுத்த முந்திரி பருப்பை சேர்க்க வேண்டும்.அல்வாவின் நிறம் குங்கும சிகப்பாக மாறியதும் இறக்கி விட வேண்டும்.பின் இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் ஆற வைக்க வேண்டும்.ருசியான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ரெடி.