முகம் பளிச்சென்று பொலிவுடன்(Glowing Skin) இருக்க வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புகின்றனர்.சரும அலர்ஜி மற்றும் சூரியக்கதிர்களால் ஏற்படும் முக பிரச்சனைகள் என்று பலவிதமான சருமப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தில் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
Table of Contents
வெள்ளரி:
வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.சூரிய ஒளியினால் கண்கள் பாதிக்கபட்டு கண்களில் வலி ஏற்படும்போது கண்களுக்கு மேலே வெள்ளரிக்காயை வைக்கலாம்.அப்படிச் செய்வதன் மூலம் கண்களை மட்டும் அல்லாமல் சருமத்தையும் வெள்ளரிக்காய் குளிரச் செய்யும். வெள்ளரிக்காயை அரைத்து சாறெடுத்து, அந்தச் சாற்றைக் ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் தேய்க்கலாம்.இவ்வாறு செய்யும் போது முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவுடன்(Glowing Skin) காணப்படும்.
எலுமிச்சை:
எலுமிச்சை நேச்சுரல் ப்ளீச்சிங் செய்யும் தன்மை கொண்டது.முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்க எலுமிச்சை பெரிதும் உதவும்.முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க எலுமிச்சை உதவும்.எலுமிச்சை தனியாக முகத்தில் பயன்படுத்தக்கூடாது.எலுமிச்சையுடன் கடலைமாவை சேர்த்து நன்றாக கலந்து அதன்பின் முகத்தில் பயன்படுத்தலாம்.இவ்வாறு செய்துவர முகம் பொலிவாக மாறும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமல்லாமல் சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவும்.தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கும் சருமத்துக்கும் தேவையான ஈரப்பதத்தை தரும் தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி பொலிவு பெற பெரிதும் உதவும்.தேங்காய் எண்ணெய் சருமத்தை மிருதுவாக வைக்க உதவும். சருமத்தில் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும்.சருமத்தில் ஏற்படும் அலர்ஜிகளை போக்க தேங்காய் எண்ணெய் உதவும்.சருமம் வயதான தோற்றத்தை அடையாமல் தடுக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும்.
கற்றாழை:
கற்றாழை முக அழகை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.கற்றாழை முகத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது.சருமம் வறண்டு போவதை தடுத்து ஈரப்பதத்துடன் இருக்க கற்றாழை பெரிதும் உதவும்.முகத்தில் பருக்கள் ஏற்படாமல் தடுக்க கற்றாழை உதவும்.முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க கற்றாழை பயன்படுத்தலாம்.
கிரீன் டீ:
கிரீன் டீ உடலுக்கு மட்டுமல்லாமல் சருமத்துக்கும் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது.முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்க கிரீன் டீ உதவும். முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மையை நீக்கி முகம் பொலிவுடன் இருக்க கிரீன் டீ உதவும்.சரும சுருக்கம் மற்றும் சருமம் வயதான தோற்றம் அடையாமல் தடுக்க கிரீன் டீ பெரிதும் உதவும்.கிரீன் டீ முகத்தில் தேய்ப்பதன் மூலம் சரும அழகை பாதுகாக்கலாம்.
ஓட்ஸ்:
ஓட்ஸ் முக அழகை பராமரிக்கவும் உதவும்.ஓட்ஸை ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவாக மாறும்.ஓட்ஸை தயிருடன் சேர்த்து பயன்படுத்தும்போது முகம் அழகு பெறும்.
கஸ்தூரி மஞ்சள்:
கஸ்தூரி மஞ்சள் முகத்தில் ஏற்படும் அலர்ஜிகளை தடுக்கப் பெரிதும் உதவும்.முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தலாம்.கஸ்தூரி மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தி வர முகம் பொலிவுடன் மாறும்.