Table of Contents
தொண்டை கரகரப்பு:
தொண்டை கரகரப்பு(Throat Infection) பிரச்சினையை சரி செய்யக்கூடிய இயற்கை வீட்டு வைத்திய குறிப்புகள் பார்க்கலாம். தொண்டைப் பகுதியில் ஏற்படும் ஒரு வித எரிச்சல் மற்றும் மிதமான வலி போன்ற உணர்வை தான் தொண்டை கரகரப்பு சொல்றோம்.
பருவகால மாற்றத்தின் போது அதிகமாக ஏற்படும் இந்த பிரச்சினையை சமாளிக்க பல பேரும் மருத்துவர்கள் கிட்ட போவாங்க, மருந்து மாத்திரைகளை சாப்பிடுவாங்க. இதனால் தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படும். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒருசில இயற்கை வைத்தியங்களை செய்தாலே தொண்டை கரகரப்பு இலிருந்து ஈசியாக விடுபட முடியும்.
-
உப்பு கரைசல்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு பிரச்சனை சீக்கிரமாகவே குணமாகிவிடும்.
-
தண்ணீர்
உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காமல் இருக்கும் போதும் தொண்டை கரகரப்பு பிரச்சனை ஏற்படும். அந்த வகையில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீரை போதுமான இடைவெளி விட்டு குடித்து வருவது தொண்டை கரகரப்பை(Throat Infection) சரிசெய்ய உதவும்.
-
நீராவி வைத்தியம்
மார்பில் தங்கியிருக்கும் சளி, தொண்டை கரகரப்புக்கு காரணமாகவும் இருக்கலாம். இந்த பிரச்சினையை சரிசெய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதோடு கொஞ்சம் நொச்சி இலைகளை போட்டு கொதிக்கவைத்து ஆவி பிடித்து வந்தால் மார்பில் தேங்கி இருக்கும் சளி கரைந்து தொண்டை கரகரப்பு பிரச்சனை சீக்கிரமாகவே சரியாகும்.
-
இஞ்சி
ஆன்டிபாக்டீரியல் பண்பு கொண்ட இஞ்சி, வரட்டு இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு பிரச்சனையை(Throat Infection) சரிசெய்ய உதவக்கூடிய அற்புதமான பொருள். அந்த வகையில் இஞ்சி வைத்து செய்யக்கூடிய டீ மற்றும் கஷாயத்தை குடித்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
-
சிக்கன் சூப்
கோழிக்கறி வைத்து தயார் செய்யப்படும் சிக்கன் சூப், ஆன்டி ஆக்சிடன்ட் என்று சொல்லக்கூடிய அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அதோட சிக்கன் சூப்பில் காணப்படும் விட்டமின்கள் சளி மற்றும் வறட்டு இருமலை சரி செய்து தொண்டை கரகரப்பு சரிசெய்ய உதவும். முக்கியமாக சிக்கன் சூப் செய்யும் போது நாட்டுக்கோழியை பயன்படுத்துவது உடலை வலிமைப்படுத்தும்.
-
ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கிளாஸ் தண்ணீரில் ரெண்டு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு பிரச்சனை சீக்கிரமாகவே சரியாகும். ஒரு நாளைக்கு மூன்று முறை இதைப்போல செய்துவந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
-
மஞ்சள் பால்
கிருமிநாசினி பண்பு கொண்ட மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் மஞ்சள் பால், தொண்டை எரிச்சல் மற்றும் தொண்டை கரகரப்பு பிரச்சினையை சரிசெய்ய உதவும். அதோட பாலில் மஞ்சள் தூள் மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் சீக்கிரமாகவே கிடைக்கும்.
-
எலுமிச்சை டீ
தொண்டை கரகரப்பு பிரச்சினையை சரிசெய்ய எலுமிச்சை சாறு கலந்த டீ குடிக்கலாம். அதாவது எலுமிச்சை சாறுடன் கொஞ்சம் தேன் மற்றும் டீ தூள் சேர்த்து தயாரிக்கப்படுகின்ற டீ தொண்டை கரகரப்பு பிரச்சினையை சரி செய்து சீக்கிரமாகவே நல்ல நிவாரணம் கொடுக்கும்.
இப்ப சொன்ன இந்த எளிமையான வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றினாலே போதும், தொண்டை கரகரப்பு ஏற்படும் போது மருத்துவர்கள் கிட்ட போகாமல் வீட்டில் இருந்தபடியே நம்மால் சரி செய்ய முடியும்.