அடர்த்தியான புருவங்களை பெற:
புருவங்கள்(Eyebrows) முகத்தின் அழகை, இன்னும் அழகாக எடுத்துக்காட்டும். பல காரணங்களால், புருவத்தின் அடர்த்தி குறைகிறது. இதனை சரிசெய்ய, இந்த மூன்று எண்ணெய்களை பயன்படுத்தி உங்கள் புருவங்களின் அடர்த்தியை அதிகரிக்கலாம்.
விளக்கெண்ணெய்(Castor oil):
விளக்கெண்ணெயில் புரதங்கள் மற்றும் கொழுப்பமிலங்கள் உள்ளன இவை முடி இழைகளின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் விளக்கெண்ணெய் பெரிதும் உதவும்.
தேங்காய் எண்ணெய்(Coconut Oil):
தேங்காய் எண்ணெய் புருவங்களை சுற்றியுள்ள சருமத்தை சீராக்க உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெய் புருவத்தின் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பெரிதும் பயன்படும்.
ஆலிவ் எண்ணெய்(Olive Oil):
ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே,கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உள்ளன. இவை மயிர்கால்களை சரி செய்யவும் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகின்றன.
அடர்த்தியான புருவங்களை பெற உதவும் எண்ணெய் தயாரித்தல்:
50 மில்லி விளக்கெண்ணெய், 50 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 50 மில்லி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்துக் கொள்ளவும்.ஒவ்வொரு நாள் இரவும், இந்த எண்ணெய்யை சிறிதளவு எடுத்து உங்கள் புருவங்களை நன்றாக மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் புருவங்கள் அடர்த்தியாக வளரும்.