மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக உதவும் சில டிப்ஸ்:
பொதுவாகவே பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பரம்பரைக் காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடித்தல், சிகரெட் குடிப்பது போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகிறது. சில டிப்ஸ் Follow பண்றதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்கலாம்.
- எலுமிச்சைச் சாற்றுடன் கொஞ்சம் உப்பு மற்றும் கடுகெண்ணெய் கலந்து Brush பண்ணனும். தினமும் இதைச் செய்துவந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்கலாம்.
- Brush ல கொஞ்சம் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து பல் தேய்ச்சிட்டு வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மறையும்.
- ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து அந்த தண்ணீரில் Brush நனைத்து Brush பண்ண வேண்டும். இவ்வாறு செய்து வர படிப்படியாக பற்களில் உள்ள மஞ்சள் நிறம் வெள்ளையாக(Teeth Whitening)மாறும். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலத்தன்மை பற்களை வெண்மையாக வைக்க உதவும். குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீருடன் கலக்காமல் பயன்படுத்தக்கூடாது. இந்த முறையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்தணும். இந்த மாதிரி செய்துட்டு வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறையை சீக்கிரமாக நீக்க முடியும்.
- அரை டீஸ்பூன் கடுகு எண்ணெயில் கொஞ்சம் உப்பு கலந்து paste போல தயார் செய்து அதை விரல்களால் தொட்டு பற்கள் மற்றும் ஈறுகளில் மசாஜ் செய்யவும். தினமும் இதுபோல செய்துட்டு வந்தால் சீக்கிரமாகவே பற்களில் உள்ள மஞ்சள் கறை நீக்கும்.
- முல்தானி மெட்டி பொடியை பற்களில் தேய்த்து வந்தாலும் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து வெள்ளையாக (Teeth Whitening)மாறும்.
- புதினா இலைகளை காயவைத்து பொடி செய்து வைத்து, அதை வைத்து பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சென்று மாறும். மேலும் பற்கூச்சத்தை சரி செய்யவும் புதினா உதவும்.
- பழுத்த ஸ்ட்ராபெர்ரி எடுத்து நசுக்கி பற்களில் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மறையும். இதை செய்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும்.
- வெந்நீரில் உப்பு போட்டு தினமும் வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்கள் சுத்தமாகி ஈறுகளில் ஏற்படும் தொற்று நீங்கும். மேலும் பற்களில் உள்ள மஞ்சள் நிறம் மறையும்.