Skip to content

TCS 25-25 Plan For Work From Home

TCS 25-25 Plan For Work From Home

கொரோனா  வைரஸை(CoronaVirus) கட்டுப்படுத்த பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய  ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.ஆனால்  ஐடி துறையில் சராசரியாக 20% மட்டுமே வீட்டில் இருந்து வேலை பார்க்க முடிகிறது.எஞ்சியவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக அலுவலகம் சென்று வர வேண்டி உள்ளது.

TCS:

TCS 25-25 Plan For Work From Home

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ்(TCS) ஊரடங்கு துவங்கியதிலிருந்து Work From Home மாடலை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 90% ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர்.உலகம் முழுக்க உள்ள டிசிஎஸ் நிறுவனங்களில் 4.4  லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கிறார் இந்தியாவில் மட்டும் 3.5 லட்சம் பேர் கொரோனா ஒளிந்து ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகும் 75% ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய வைக்க TCS  நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்த நடைமுறையை 2025 வரை தொடர்ந்து கடைபிடிக்க திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு 25க்கு 25 மாடல் என பெயரிட்டுள்ளது TCS.100 சதவீத உற்பத்தி திறனை எட்ட 25 சதவீதம் பேர் ஆபீஸ் வந்தாலே போதுமானது என்று சொல்கிறார் டிசிஎஸ் நிறுவனத்தின் MD ராஜேஷ் கோபிநாதன்.

TCS 25-25 Plan For Work From Home

Work From Home:

Work From Home  மாடலை கொரோனாகாக கொண்டு வரவில்லை TCS ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை நீண்ட காலமாகவே செய்து வந்தோம் அதை இப்போது நடைமுறைக்கு கொண்டு வருகிறோம் அவ்வளவுதான்.வீட்டிலிருந்து தங்கு தடையின்றி வேலை செய்ய ஆன்லைன் கட்டமைப்பை டிசிஎஸ் உருவாக்கியுள்ளது.SPWS  மூலம் ஊரடங்கு காலத்தில் TCS ஊழியர்கள் 35 ஆயிரம் மீட்டிங் நடத்தி உள்ளனர்.4 லட்சம் முறை போனில் உரையாடி உள்ளனர். 3 1/2 கோடி மெசேஜ்களை பரிமாற்றம் செய்துள்ளனர்.இதன்மூலம் Work  From  Home மாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.அதனால் இதையே  தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குனர் ராஜேஷ் கோபிநாதன் கடிதம் எழுதியிருக்கிறார்.

Work  From  Home BeneFits:

வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் நிறுவனத்திற்கு பல விதங்களில் லாபம் என்று ராஜேஷ் கோபிநாதன் பட்டியலிடுகிறார்.

  1. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அமர்ந்து வேலை பார்க்கும் அளவுக்கு பெரிய அலுவலக கட்டிடங்கள் தேவை இருக்காது.தண்ணீர்,மின்சாரம் உள்ளிட்ட செலவு மிச்சம்.

      2 அலுவலக பணி நேரத்தில் 25 சதவீத நேரத்தை செலவழித்தால் மொத்தம்  வேலையும் முடித்துவிடலாம்.

TCS 25-25 Plan For Work From Home

ஆகவே வீட்டிலிருந்து வேலைபார்ப்பதால் Project விரைந்து முடிக்க முடியும், உற்பத்தித் திறன் 25 சதவீதம் அதிகரிக்கும் கொரோனா,இயற்கைப் பேரிடர்கள் எதிர்காலத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் நிறுவனம் தங்குதடையின்றி இயங்கும்.நீண்டகாலத்திற்கு நிறுவனம் நிலைத்திருக்கும் என்கிறார் ராஜேஷ் கோபிநாதன்.

இராணுவம்,பொதுத்துறை நிறுவனங்கள்,வங்கிகள்,நிதி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற வாடிக்கையாளர்களின் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய ஆன்லைன் கட்டமைப்பில் பல பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி உள்ளோம்.அதனால் Work From Home முறையால் ப்ராஜெக்ட் பாதுகாப்பிற்கு எந்தக் குறைபாடும் வராது என்கிறார் TCS CEO சுப்ரமணியன்.

 TCS  அலுவலகம் பெரும்பாலும் மெட்ரோ சிட்டியில் தான் அமைந்துள்ளது, பயண தூரம், வாகன நெரிசல் போன்ற காரணங்களால் சில ஊழியர்கள் பணி நேரத்திற்கு நிகராக பயணிக்க வேண்டியிருக்கிறது இதனால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை.Work From Home முறையால்  வீட்டிலிருந்து வேலை செய்துகொண்டு குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடலாம்.75 சதவீத ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க டிசிஎஸ் கூறியிருப்பதால், விப்ரோ(WIPRO), இன்ஃபோசிஸ் (INFOSYS) போன்ற நிறுவனங்களும்  டிசிஎஸ் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.TCS  இந்தத் திட்டத்தால் ஐடி துறையில் மிகப்பெரிய மாற்றம் வரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *