ஓமிக்ரான் Omicron:
புதிய வகை கொரோனா திரிபு ஓமிக்ரான்(Omicron) என்று அழைக்கப்படுகிறது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களிலே 50 பிறழ்வுகளுடன் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் அறிகுறிகள்:
ஓமிக்ரான்(Omicron) அறிகுறிகளில் தலைவலி, அதிக சோர்வு, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் போன்றவை ஏற்படலாம். மேலும் காய்ச்சலையும் அறிகுறியாக காட்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
வேகமாக பரவும்:
டெல்டா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பயங்கர உயிர்பலி ஏற்படுத்தியது. அந்த டெல்டா வைரஸில் கூட இத்தனை பிறழ்வுகள் இல்லை. ஆகவே மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் மிகவும் கவலை தரக்கூடியது என்று தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி:
புதிய வகை கொரோனா வைரஸின் முள் புரதத்தில் மட்டுமே 30 க்கும் அதிகமான பிறழ்வுகளை கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் இந்த புரதத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. ஐரோப்பா மற்றும் ரஷ்ய நாடுகளில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் , இந்த புதிய வகை வைரஸ் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை:
1.வெளியே செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லவேண்டும்.
2. எப்போதும் எல்லா இடங்களிலும் மற்றவர்களிடமிருந்து ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும்.
3.கூட்டம் அதிகம் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.
4. கைகளை சுத்தமாக வைக்க வேண்டும்.
5.தடுப்பூசி அனைவரும் போடவேண்டும்.
6. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.