Summer Special Bath

0
240
Summer Special Bath

கோடை வெயிலை(Summer) சமாளிக்க  குளிர்ச்சியான உணவுகள், குளிர்ச்சியான   ஜூஸ் போன்றவற்றை சாப்பிட்டு உடல் சூட்டை குறைக்க முயல்கின்றனர். குளிக்கும் முறைகள் மூலமாகவும் உடல் சூட்டை குறைக்கமுடியும். வெயிலுக்கேற்ற பலவகையான குளியல்கள் பற்றி பார்க்கலாம்.

வெயிலுக்கு ஏற்ற குளியல் Summer  Bath:

வெயில் நாட்களில் பொதுவாக இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.குழந்தைகளாக இருந்தால் வெதுவெதுப்பாக இருக்கும் நீரை பயன்படுத்தலாம்.

Summer Special Bath

வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உடம்பு மற்றும் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

உடல் சூட்டை தணிக்க நன்னாரி வேர் அல்லது வெட்டிவேரை தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து அந்த நீரை பயன்படுத்தி குளிக்கலாம்.

முல்தானி மெட்டியை இரவு முழுவதும் மண்பானையில் ஊறவைத்து மறுநாள் அதை உடல் முழுவதும் பூசி  45 நிமிடங்கள் வரை ஊற வைத்திருந்து பின்பு குளிக்கலாம்.

 Sandal wood oil,Rose wood oil,Lemon Tree oil,Aroma oil போன்றவற்றை மூன்று சொட்டு குளிக்கும் தண்ணீரில் விட்டு குளிக்கலாம். இவ்வாறு குளிப்பது உடம்புக்கு குளிர்ச்சி அளிக்கும்.அரோமா ஆயில் பயன்படுத்தும் போது உடல் சூடு குறைவதோடு மட்டுமின்றி மன அழுத்தமும் குறையும்.

 நல்ல களிமண் கிடைக்கும் எனில் அதையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதனை தலையிலிருந்து கால் விரல்கள் வரை பூசி 45 நிமிடங்கள் காயவைத்து பின்பு குளிக்கலாம். இதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும்.

 வெயிலில் அலைந்து களைப்பாகவும் உடம்பு முழுக்க வலியையும் உணர்பவர்கள் Peppermint  ஆயிலை குளிக்கும் தண்ணீரில் இரண்டு சொட்டு விட்டு குளிக்கலாம்.

Summer Special Bath

 

 வெந்தயத்தை பேஸ்ட் போல அரைத்து தலையில் ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்தாலும் உடல் குளிர்ச்சி அடையும்.

 உடல் சூட்டைத் தணிக்க கைப்பிடி அளவு செம்பருத்தி இலைகளை  அரைக்காமல் அப்படியே தண்ணீரில் போட்டு ஊறவைத்து குளிக்கலாம். கைப்பிடி அளவு செம்பருத்தி இலைகளை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து பின்பு அந்த கலவையை  தலைக்கு ஷாம்பு  போல பயன்படுத்தி குளிக்கலாம்.

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையும் அரை ஸ்பூன் மஞ்சளும் கலந்து குளிக்கும்போது சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம்.வெயில் நேரத்தில் இந்த நீரை பயன்படுத்தி குளிக்கும்போது  சொரியாசிஸ் நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வேப்பிலையும் மஞ்சளும் சிறந்த கிருமி நாசினி.

Summer Special Bath

 தலையில் நல்லெண்ணெய் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்த பின், அதன்மேல் ஒரு கைப்பிடியளவு வேப்பிலை மற்றும் அரை ஸ்பூன் மஞ்சளுடன் ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்த கலவையை தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் உடல் சூடு குறையும். பொதுவாக வெயில் நேரத்தில் அதிகமாக வியர்க்கும்.தலையில் வியர்வையினால் உண்டாகும் பேன் மற்றும் பொடுகுத் தொல்லையை இந்த குளியல் குறைக்கும்.பேன் மற்றும் பொடுகு தொல்லை அதிகமாக இருப்பவர்கள் அரைத்த கலவையுடன் 2 மிளகு சேர்த்து அரைத்து பூசி குளிக்கலாம்.

 வெயில் காலத்தில் வெயில், தூசி போன்ற காரணங்களால் சிலருக்கு  பருத்தொல்லை அதிகமாக காணப்படும்.முகத்தில் பரு இருப்பவர்கள் வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து பருக்களின் மீது பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு குளித்தால் பரு தொல்லை குறையும்.

 கற்றாழையின் சாற்றை தலை மற்றும் கை கால்களில் பூசி அரைமணி நேரம் வைத்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

குழந்தைகளை டப் தண்ணீரில் விட்டு சிறிது நேரம் குளிப்பாட்டலாம். இந்த குளியல் வெயிலுக்கு இதமாக இருக்கும்.

 வியர்க்குரு இருக்கும் இடங்களில் குளித்தபின் சந்தனத்தைப்  பூசலாம்.

Summer Special Bath

 

 கோடைக்காலங்களில் சம்மர் ட்ரிப்பாக(Summer Trip) அருவிகளுக்கு(Falls) சென்று குளிக்கலாம்.

 எல்லாவற்றுக்கும் மேலாக உடல் வறட்சி அடைவதைத் தடுக்க வெயில் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here