Skip to content

Spices For Weight Loss in Tamil

Spices For Weight Loss in Tamil

உடல் எடையை குறைக்க உதவும் மசாலா பொருட்கள்(Spices) பற்றி பார்க்கலாம். உடல் எடை பிரச்சினை காரணமாக பலரும் தற்போது கஷ்டப்பட்டு வருகின்றனர். உடல் எடை குறைக்க  பெரும்பாலோனோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஜிம் செல்வது, டயட் இருப்பது, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது   போன்ற பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். உடல் எடையை குறைக்க நம் சமையலறையில் உள்ள மசாலா பொருட்கள் பலன் தருமா என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம்.  ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலமாக   ஆரோக்கியமாக உடல் எடையை(Weight Loss) குறைக்க முடியும்.

நல்ல மிளகு:

நெஞ்செரிச்சலை நீக்குவது முதல் உடல் எடை குறைப்பது வரை  பல்வேறு நன்மைகளை தருகிறது நல்ல மிளகு. நல்ல மிளகில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்ஸ்  உடலிலுள்ள கொழுப்பை நீக்க   உதவுகிறது. இதன் காரணமாக உடல் எடை(Weight Loss) குறையும். நல்ல மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம்  உடல் எடையை குறைக்க முடியும்.

Spices For Weight Loss in Tamil

ஏலக்காய்:

ஏலக்காயில் உள்ள மெலடோனின்  உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக உடல் எடையை குறைக்க முடியும். குடிக்கும் தண்ணீரில் ஏலக்காயை போட்டு வைத்து, ஏலக்காய் தண்ணீரை குடித்து வந்தால் உடல் எடை(Weight Loss)குறையும்.

Spices For Weight Loss in Tamil

வெந்தயம்:

வெந்தயம் உடலிலுள்ள கொழுப்பை குறைக்க பெரிதும் உதவும். தினமும்  வெந்தய டீ குடித்து வந்தால்   உடல் எடையை குறைக்க முடியும். வெந்தயம் தொப்பையை குறைக்க பெரிதும் பயன்படும்.

Spices For Weight Loss in Tamil

சீரகம்:

சீரகம் உடலிலுள்ள கொழுப்பை குறைக்க உதவும். ஒரு ஸ்பூன் சீரக  விதைகளை தண்ணீரில் ஊறவைத்து ,மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடல் எடை  குறையும்.  சீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடையை குறைக்கலாம்.

Spices For Weight Loss in Tamil

பெருஞ்சீரகம்:

பொதுவாகப் பெருஞ்சீரகத்தை  செரிமானத்திற்கும்,வாய் புத்துணர்ச்சியாக இருக்கவும்  பயன்படுத்துவார்கள். பெருஞ்சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து   வடிகட்டி அது தண்ணீரை குடித்து வந்தால் தொப்பை குறையும். பெருஞ்சீரகம் உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் பயன்படும்.

இலவங்கப்பட்டை:

லவங்கப்பட்டை உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படும்.  தினமும்  இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க முடியும்.

Spices For Weight Loss in Tamil

மஞ்சள்:

மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும். வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த மஞ்சள் பெரிதும் உதவும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்  மஞ்சளை உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

Spices For Weight Loss in Tamil

Leave a Reply

Your email address will not be published.