Thursday, December 2, 2021
HomeBeauty TipsSkin Care Tips For Winter in Tamil

Skin Care Tips For Winter in Tamil

 

குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்க உதவும் டிப்ஸ்

கோடைகாலத்தை விட குளிர்காலத்தில் தான் சருமம் அதிகமாக வறண்டு போகும். குளிர்காலத்தில் சருமம் உலர்ந்து போதல், ஈரப்பதம் இன்மை, சருமத்தில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். குளிர்காலத்தில் தான் அதிகமாக சருமத்தை பராமரிக்க வேண்டும். குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்க(Skin Care Tips) உதவும் டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
1.குளிர்காலத்தில் சருமத்தின் மென்மையை பாதுகாக்க கடலைமாவை பயன்படுத்தலாம்.
2. முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க வீட்டில் இருக்கும் பாலை பயன்படுத்தலாம். பாலை பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்து விடலாம். பின்னர் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். பால் முகத்தில் இருக்கும் அழுக்கு, தூசு ஆகியவற்றை நீக்கி சருமத்தை பொலிவாகவும், சருமம் வறண்டு போகாமலும் தடுக்க பெரிதும் பயன்படும்.
3. குளிர்காலத்தில் தோல் வறண்டு போவதை தடுக்க தேங்காய் எண்ணெய் குளிக்கப் போகும் முன்பு உடலில் தேய்த்து, பின்னர் குளிக்கலாம்.
4. ரோஸ் வாட்டர் சருமத்தை மென்மையாக்க உதவும். ரோஸ் வாட்டர் சருமத்தில் இருக்கும் துளைகளை(clogged pores)  நீக்க பெரிதும் பயன்படும். மேலும் சருமம் வறட்சியடையாமல் தடுக்க பெரிதும் உதவும்.
5. குளிர்காலத்தில் உதடு வறண்டு வெடிப்பு ஏற்படும். அதை சரி செய்ய வெண்ணெய்யை  உதட்டில் தடவலாம். ஆஹா
6. குளிர்காலத்தில் தாகம் எடுக்காது, அதனால் குறைந்த அளவில் தான் தண்ணீர் குடிப்போம். இதன் காரணமாக உடலில் உள்ள நீர்சத்து குறைந்து, சருமம் வறண்டு போகும். சருமத்தில் ஏற்படும் வறட்சியை சரி செய்ய தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
7. ஆரஞ்சு தோல் பொடியை முகத்தில் தேய்த்து வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி நீங்கும்.
8. ஓட்ஸ் ஃபேஸ் பேக்கை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும வறட்சி நீங்கும். ஒரு ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், இரண்டு ஸ்பூன் பால் கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்துவர முகத்தில் உள்ள வறட்சி நீங்கி முகம் பொலிவுடன் மாறும்.

 

Recommended Articles:

Onion hair oil for Hair growth

Benefits of Aloevera For Hair growth

15 Amazing Tips For Grey Hair

Top 5 Hair Growth Herbs

Best food for winter season in India

Amazing Health Benefits Of Honey

Figs: Nutrition and 15 amazing health Benefits

Health Benefits Of Spinach

Health Benefits of Aavarampoo

Top 10 Vegetables That Are High in Vitamin C

Amazing Benefits Of Nilavembu Kashayam

Potato For Skin Whitening

Top10 VitaminC Rich Fruits

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments