நல்லெண்ணெய் (sesame oil):
பழைய காலத்தில் நம் முன்னோர்களின் முடி ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் பயன்படுத்திய எண்ணெய் மற்றும் உணவுகளும் ஆகும்.அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.அதனால் தான் நம் முன்னோர்களின் முடி ஆரோக்கியமாகவும் , இளநரை ஏற்படாமலும், வழுக்கை ஏற்படாமலும் இருந்தது.எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
நல்லெண்ணெயில் விட்டமின் ஈ, விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் உள்ளன.வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் சூடாக்கி தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் கொடுத்தால் முடி நன்கு வளரும்.
நல்லெண்ணெய் தலைக்கு தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
தலைமுடி உதிர்வைத் தடுக்கும்:
நல்லெண்ணெய் தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வை தடுக்கலாம்.
தலைமுடி வளர்ச்சிக்கு:
நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்து வந்தால் ஸ்கால்ப்பில் உள்ள ரத்த ஓட்டம் அதிகரித்து முடி நன்றாக வளரும்.
வறட்சியை தடுக்கும்:
நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்து வந்தால் முடி வறட்சி நீங்கி முடி ஈரப்பதத்துடன் இருக்கும்.
பேன் தொல்லையை நீங்க:
நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப் போராடி,ஸ்கால்ப்பை பேன் தொல்லையில் இருந்து பாதுகாக்கும்.
பொடுகு நீங்க:
வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் சூடாக்கி தலையில் மசாஜ் செய்து வந்தால் பொடுகு நீங்கும்
நரைமுடியை தடுக்கும்:
நல்லெண்ணெய் தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரைமுடியை தடுக்கலாம்.
குறிப்பு:
நல்லெண்ணெய் அதிகமான குளிர்ச்சி தன்மை உடையது. அதனால் நல்லெண்ணெய் பயன்படுத்தும்போது சூடாக்கி தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது.
a