Saffron Gel:
முதலில் 2 கற்றாழை(Aloevera) மடலை எடுத்து உள்ளே இருக்கும் ஜெல்லை(Aloevera gel) எடுத்து மிக்ஸியில் போட்டு அடித்தால் தண்ணீர் போல ஆகி விடும்.இதை அப்படியே ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.இத்துடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர்(Rose Water) சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் குங்குமப்பூவை(Saffron) தண்ணீரில் ஊற வைத்து அதில் ஒரு ஸ்பூனை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.குங்குமப்பூ இல்லாதவர்கள் பாதி கேரட்டை(Carrot) மிக்ஸியில் அடித்து அதன் சாறை எடுத்து அதிலிருந்து ஒரு ஸ்பூன் மட்டும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.இது மூன்றையும் நன்றாக கலந்து விட்டால் ஜெல் பதத்திற்கு கிடைத்து விடும்.
இதை ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.இது முழுக்க இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்வதால் இதை ஃப்ரிட்ஜில் வைத்து தான் ஸ்டோர் செய்ய வேண்டும்.இந்த ஜெல்லை தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன்பு முகத்தை சுத்தமாக அலம்பி விட்டு துணி வைத்து துடைத்த பிறகு,இதை உங்கள் முகத்தில் தேய்த்து அப்படியே விட்டு விடுங்கள்.மறுநாள் காலையில் எழுந்தவுடன் நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள்.உங்கள் முகம் அத்தனை பிரகாசமாக பளிச்சென்று இருக்கும் அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள்.