கருப்பை நீர்க்கட்டி (PCOS):
கருப்பை நீர்க்கட்டி(PCOS) என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அதிகரிப்பதால் ஏற்படும் நோயாகும். ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் இல்லாமல் இருத்தல், முகத்தில் அதிக முடி வளர்ச்சி,அதிக ரத்தப் போக்கு, மலட்டுத்தன்மை, இடுப்பு எலும்புகளில் வலி ஆகியவை கருப்பை நீர்க்கட்டி அறிகுறிகளாகும். உடல் பருமன், நீரிழிவு நோய், சீரற்ற மனநிலை, இதய நோய் ஆகியவையும் கருப்பை நீர் கட்டியினால் ஏற்படும் நோய்களாகும்.ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் ஆகியவையும் கருப்பை நீர்கட்டி ஏற்பட காரணமாகும். ஹார்மோன் நிலையை ஒழுங்காக வைத்திருத்தல், ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் கருப்பை நீர்க்கட்டி சரி செய்யலாம்.
கருப்பை நீர் கட்டியை சரி செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள்:
முழு தானியங்கள்:
ரத்தத்தில் இருக்கும் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவை சரி செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம். கம்பு, ராகி, சோளம் ஆகிய முழு தானியங்களை உணவில் சேர்க்க வேண்டும். பழ ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக முழு பழங்களை சாப்பிடுவது நல்லது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை சீராக வைக்க முடியும். நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
நட்ஸ்:
பாதாம், ஆளி விதை, சூரியகாந்தி விதைகள், அக்ரூட் பருப்பு ஆகியவற்றில் நல்ல கொழுப்புகள் இருக்கின்றது. இவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் கருப்பை நீர்க்கட்டி(PCOS) சரி செய்யலாம்.
பால்:
கருப்பை நீர்க்கட்டி இருப்பவர்களுக்கு கால்சியம் மிகவும் அவசியமான ஒன்று. பாலில் உள்ள கால்சியம் கருப்பையில் முட்டையின் வளர்ச்சிக்கும், எலும்புகளை பலப்படுத்தவும் பெரிதும் உதவும்.
பசலைக்கீரை:
உடல் பருமனால் ஏற்படும் மலட்டுத் தன்மையை நீக்க பசலைக்கீரையை சாப்பிடுவது சிறந்தது.
முட்டை:
பெண்கள் தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால் பிசிஓஎஸ் பிரச்சனையை சரிசெய்யலாம்.
மீன்:
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன்களை சாப்பிடுவதன் மூலம் பிசிஓஎஸ் பிரச்சனையை சரிசெய்யலாம்.
பட்டை:
உடலில் உள்ள இன்சுலின் அளவை குறைக்க பட்டை பெரிதும் உதவும். மேலும் உடலிலுள்ள கொழுப்புகளை நீக்கவும் பட்டை உதவும்.கருப்பை நீர் கட்டியை(PCOS) சரி செய்ய பட்டை பெரிதும் உதவும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிசிஓஎஸ் பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவும்.
பார்லி:
அதிகப்படியான இன்சுலின் சுரப்பை சரி செய்ய பார்லி பெரிதும் உதவும். இதன் காரணமாக பிசிஓஎஸ் பிரச்சனை நீங்கும்.
தூக்கம்:
இரவு தூக்கம் 6 TO 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.சரியாக தூங்காமல் இருப்பது ஹார்மோன் பிரச்சினையை அதிகப்படுத்தும்.
உடற்பயிற்சி:
உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். மேலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சரி செய்யலாம்.
மேலே சொன்ன உணவுகள் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினையை சரி செய்யலாம்.