வழுக்கையான இடத்திலும் முடியை வளர வெங்காயம் Onion for Baldness:
முடி பிரச்சினை இன்று எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை. முடி பிரச்சினை சரி செய்ய பலரும் விதவிதமான கெமிக்கல் கலந்த எண்ணெய்களை விலை அதிகம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் முடி பிரச்சினை இன்று அதிகமாகின்றன. முடி பிரச்சினை சரி செய்ய வீட்டு கிச்சன்லேயே இருக்கக்கூடிய ஒரு இயற்கையான அற்புதப் பொருள் வெங்காயம் .வெங்காயத்தை சமையல் செய்ய பயன்படுத்துகின்றோம். ஆனால் வெங்காயம் சமையலுக்கு மட்டுமல்லாது முடி வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுகிறது. பொடுகு தொல்லை,முடி உதிர்தல்,முடி வளர்ச்சியின்மை,முடி வழுக்கை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வெங்காயம் ஒரு சிறந்த தீர்வளிக்கும்.
வெங்காயத்தில் கால்சியம் விட்டமின் B6,விட்டமின் சி, சல்ஃபர் போன்ற சத்துக்கள் உள்ளன.பெரிய வெங்காயமும் பயன் படுத்தலாம் இருப்பினும் சின்ன வெங்காயம் அதிகப்படியான சல்பர் மற்றும் கால்சியம் சத்துகளை கொண்டது.
வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
வெங்காயத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தலையில் ஏற்படும் அரிப்பு,பொடுகு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்.
வெங்காயத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நரைமுடி வராமல் தடுக்கும் தன்மை உடையது.
தலையில் பூச்சி வெட்டு காரணமாக ஒரு சில இடங்களில் முடியின்றி காணப்படும். இந்த பிரச்சினையை சரிசெய்ய வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்தால் பூச்சிவெட்டு சரியாகும்.
வெங்காயத்தை கூந்தலுக்கு பயன்படுத்தும்போது கூந்தல் பளபளப்பாக மாறும். முடி அடர்த்தியாக வளரவும் முடி நீளமாக வளரவும் வெங்காயம் பெரிதும் உதவும்.
வெங்காயத்தை தலைக்கு பயன்படுத்தினால் பேன் தொல்லை சரியாகும்.
வெங்காயத்தை அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து தலைக்கு தேய்த்து பத்து நிமிடம் கழித்து குளித்துவர முடி உதிர்தல் பிரச்சினை சரி ஆகும்.
வெங்காயத்தை நன்றாக அரைத்து மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து குளித்துவந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வெங்காயத்தை இடித்து சாறெடுத்து இரண்டு சோற்றுக்கற்றாழையை பிளந்து அதில் உள்ள ஜெல்லை எடுத்து அதனுடன் இஞ்சி சாறு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்
ஆனியன் ஹேர் ஆயில்: Onion hair oil
வெங்காயத்தைப் பயன்படுத்தி ஹேர் ஆயில் எப்படி தயாரிக்கலாம் என்று பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் -10
தேங்காய் எண்ணெய் -2 ஸ்பூன்
ரோஜாப்பூ- 2
செய்முறை:
சின்ன வெங்காயத்தை முதலில் தோல் நீக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.அப்புறம் சின்ன வெங்காயத்தையும் ரோஜா இதழ்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயச் சாற்றை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு கிண்ணத்தை எடுத்துக்கோங்க.அதுல தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்துக்கோங்க.அதனுடன் அரைத்து வெங்காயச்சாறு இரண்டு ஸ்பூன் சேர்க்கவும். அதன் பிறகு நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.இந்த கலவையை தலையில் தேய்த்து குளித்துவந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் நீண்டு வளரும். இதை வாரம் இரண்டு நாட்கள் என தொடங்கி குறைந்தது 2 மாதங்களாவது தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு நாம் இயற்கை அளித்திருக்கும் பொருட்களை பயன்படுத்தி இயற்கையான வாழ்வை வாழ்ந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.