புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பவர்:
ஸ்டார் விஜய் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.பிக்பாஸ் சீசன் 4 இல் முதலாவதாக 16 பேர் பங்கேற்றுள்ளனர்.அதன் பின்னர் புதியதாக டிவி தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் 17 போட்டியாளராக வந்தார்.அதன் பின்பு நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டை விட்டு 1st Week Eviction ல் வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டின் நிலை:
நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீட்டுக்குள் சிலர் சண்டை போட ஆரம்பித்துள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்திக்கும், சனம் ஷெட்டிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அது ஒருபுறமிருக்க அனிதா சம்பத் தன்னை யாரும் பேச அனுமதிக்கவில்லை என்று அழுது கொண்டிருக்கிறார்.மறுபக்கம் அமைதியாக இருந்தால் நான் வேஸ்டா என பாடகர் வேல்முருகன் கோபப்பட்டு கத்தினார்.
மேலும் தற்போது பிக்பாஸ் அரக்கர் மற்றும் அரச குடும்ப டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பலருக்கும் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
WildCard Entry:
இப்படி பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்கும் நேரத்தில் புதிதாக ஒரு போட்டியாளர் வீட்டுக்குள் WildCard Entry ஆக நுழையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பவர் பிரபல ரேடியோ தொகுப்பாளினி மற்றும் பின்னணி பாடகியுமான சுசித்ரா ஆவார். ரேடியோ தொகுப்பாளினி என்பதால் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் அதனால் வீட்டுக்குள் நிச்சயம் கலகலப்பு ஏற்படும்.