முலாம்பழ கீர் Muskmelon kheer:
வெயில் காலத்தில் கிடைக்கும் முலாம் பழத்தை பயன்படுத்தி முலாம்பழ கீர் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையானவை:
முலாம்பழம்- பாதி
காய்ச்சாத பால்- அரைக் கப்
பால் பவுடர்- ரெண்டு ஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க்- ஒரு ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ்- கால்ஸ்பூன்
சர்க்கரை- 3 ஸ்பூன்
பாதாம்- 4
செய்முறை:
முலாம்பழம்(Muskmelon) ஒன்றை எடுத்து இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு பாதி மட்டும் எடுத்துக் கொள்ளவும்.முலாம் பழத்தின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சதைப்பகுதியை துருவவும்.பின்பு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.பின்னர் பால் பவுடர் சேர்க்க வேண்டும்.பின்னர் கண்டன்ஸ்டு மில்க் ஐ சேர்க்க வேண்டும்.பின்பு சர்க்கரை சேர்க்க வேண்டும்.பின்னர் நன்கு காய்ச்சி ஆற வைக்க வேண்டும்.ஆறியதும் அரைத்த முலாம்பழ கலவையை சேர்க்க வேண்டும்.பின்னர் வெண்ணிலா எசன்ஸ் ஐ சேர்க்க வேண்டும்.பின்னர் நன்றாக கலக்கவும்.பின்னர் நறுக்கிய பாதாம் துண்டுகளை தூவி பரிமாறலாம். இதை பிரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் பரிமாறலாம்.