கோடைக் காலத்தில் கிடைக்கும் முலாம் பழத்தை பயன்படுத்தி கேசரி(Kesari) எப்படி தயாரிக்கலாம் என்று இங்கே பார்க்கலாம்.
முலாம்பழ கேசரி Musk Melon Kesari:
தேவையானவை:
முலாம்பழவிழுது- அரைக் கப்
ரவை- அரைக் கப்
சர்க்கரை- ஒரு கப்
தண்ணீர்- 1 1/2 கப்
ஏலக்காய்த்தூள்- சிறிதளவு
நெய்- கால் கப்
முந்திரி, திராட்சை- சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு Pan எடுத்துக் கொள்ளவும்.அதில் சிறிதளவு நெய் சேர்த்து, முந்திரி மற்றும் திராட்சை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.அதே நெய்யில் ரவையை சேர்த்து நன்கு வறுக்கவும்.பின்பு தண்ணீரை ஊற்றி ரவையை வேகவிடவும்.பின்பு ரவை வெந்தவுடன் சர்க்கரை சேர்க்க வேண்டும்.பின்னர் முலாம் பழ விழுது மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.பின்னர் நன்றாக கிளறவும்.பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்க்கவும்.கேசரி பதத்துக்கு வந்ததும் இறக்கிவிடவும்.சுவையான முலாம்பழ கேசரி ரெடி.