Table of Contents
சரும பிரச்சனைகளை போக்க உதவும் புதினா:
உடல் நலத்துக்கும் மட்டுமல்லாது சரும அழகை பாதுகாக்கவும் புதினா(Mint) பெரிதும் பயன்படும்.
சரும நிறத்தை அதிகரிக்க:
புதினா(Mint) வெயிலினால் முகத்தில் ஏற்படும் கருமையைப் போக்க உதவும். புதினா சாறு சரும நிறத்தை மேம்படுத்த பெரிதும் பயன்படும். புதினா வை தொடர்ந்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.
முகப்பருவை சரிசெய்ய:
புதினாவில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் முகத்தில் எண்ணெய் சுரப்பதை தடுக்க பெரிதும் பயன்படும். ஆயில் ஸ்கின் இருப்பவர்களுக்கு புதினா சிறந்த பலனைத் தரும். புதினா முகப் பருக்கள் ஏற்படாமல் தடுக்கப் பெரிதும் பயன்படும். புதினா இலை சாற்றை முகப்பரு மீது தடவிவர விரைவில் முகப்பரு மறையும்.
கருவளையங்களை போக்க:
புதினாவில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கருவளையங்கள் ஏற்படாமல் தடுக்க பெரிதும் பயன்படும். கருவளையம் இருப்பவர்கள் புதினா இலை சாற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் கருவளையம் மறைந்து போகும்.
காயங்களை குணப்படுத்த:
புதினாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை வெட்டுக் காயங்கள், தோல் அரிப்பு போன்றவற்றை சரிசெய்யும் தன்மை கொண்டது. புதினா இலை சாற்றை காயம்பட்ட இடத்தில் தேய்த்துவர காயம் விரைவில் ஆறும்.
சருமம் ஈரப்பதத்துடன் இருக்க:
புதினா சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க பெரிதும் உதவும். புதினா இரத்த ஓட்டத்தை சீராக்கி சருமம் என்றும் இளமையுடன் இருக்க உதவும். சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கவும் புதினா பெரிதும் உதவும்.புதினா சாற்றை தொடர்ந்து முகத்தில் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி முகமானது பொலிவாக மாறும்.