திரில்லர் திரைப்படத்தில் நடிக்கும் நயன்தாரா:
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாரா “ஐயா” படத்தில் குடும்பப் பெண் போல அறிமுகமானார்.அந்தத் திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சந்திரமுகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்த இரண்டு திரைப்படங்கள் மூலமும் மக்களை கவர்ந்தார் நயன்தாரா(Nayanthara).
லேடி சூப்பர்ஸ்டார்:
தன்னுடைய அறிமுகப் படத்தில் இருந்து தற்சமயம் வரை ஆக்டிவாக இருக்கும் ஒரே நடிகை நயன்தாரா.லேடி சூப்பர்ஸ்டார்(Lady Super Star) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் நயன்தாரா.நயன்தாரா(Nayanthara)தமிழ் மட்டுமல்லாது கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.நயன்தாரா விக்னேஷ்சிவனை காதலித்து திருமணத்திற்காக நாள் பார்த்து கொண்டு வருகிறார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
நிழல்:
சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் கதைகளுக்கு மட்டுமே நயன்தாரா(Nayanthara)ஒப்புக்கொள்கிறார்.அந்த வரிசையில் அடுத்ததாக நயன்தாரா நடித்து வெளியாகப் போவது ஒரு தெலுங்கு திரைப்படம் ஆகும்.அந்த திரைப்படத்தின் பெயர் நிழல். நிழல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் திரைப்படத்தில் நயன்தாராவுடன் குஞ்சாக்கோ போபன் இணைந்து நடிக்கிறார். இந்த திரைப்படம் ஒரு திரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தை முழுவதும் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.