Google launches its Jobs app in India- Kormo Jobs
இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்காக Kormo Jobs app என்ற தனிப் பயன்பாட்டு செய்தியை அறிமுகப்படுத்த உள்ளதாக Google கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. தற்போதைய Corona ஊரடங்கு காரணமாக வேலை இழப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது தற்பொழுது கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த செயலியானது வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த செயலியானது Kormo Jobs app 2018 ஆம் ஆண்டு வங்கதேசத்திலும் அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இந்தோனேசியாவிலும் இதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Google நிறுவனம் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு கூகுள் பி செயலியின் மூலமாக கூகிள் ஜாப்ஸ் என்ன வேலைவாய்ப்புக்கான செயலியை தொடங்கியிருந்தது அதன் மூலமாக டன்சோ (Dunzo) மற்றும் சொமாட்டோ (Zomato) 20 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்பு இருந்தது இந்த நிலையில் தற்போது பிரத்யோகமான செயலியை வேலை தேடுபவர்களுக்கு கூகுள்அறிமுகப்படுத்தியுள்ளது
சுய விவரங்களை பதிவிடல்
இந்த செயலியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் சுய விவரங்களை பதிவிட்டு ஒரு ரெஸ்யூமை (Resume) உருவாக்கிக்கொள்ள முடியும் அதன் பிறகு தகுதிக்கேற்ற வேலைகளை தேடி பயன்பெற முடியும்
Google நிறுவனத்தின் இந்த புதிய செயலியானது ஏற்கனவே புழக்கத்திலுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லிங்க்ட்இன்(linkedin) நோ கிரி (naukri) மற்றும் டைம்ஸ் ஜாப்ஸ் (timesjobs) போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை தரும் நிறுவனத்துக்கு போட்டியாகும் இருக்குமென நம்பப்படுகிறது.