ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடலளவில் சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆகியவை தைராய்டு(Thyroid) சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலில் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாமல் இருந்தால் பல பிரச்சினைகள் ஏற்படும். ஒருவரது உடலில் தைராய்டு சுரப்பி, தேவையான அளவைவிட அதிகமாக ஹார்மோன்களைச் சுரந்தால், அது ஹைப்பர் தைராய்டிசம் என்றழைக்கப்படும். தைராய்டு சுரப்பி ,தேவையான அளவைவிட குறைவாக சுரந்தால் அது ஹைப்போ தைராய்டிசம் என்றழைக்கப்படும். வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினையாக தைராய்டு உள்ளது.
ஆரம்பத்திலேயே தைராய்டு(Thyroid) பிரச்சினை கண்டறிந்து சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் குணப்படுத்திவிடலாம்.ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடலளவில் சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆகியவை தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. எலுமிச்சை ஜூஸ் குடிப்பது தைராய்டு பாதிப்பை கட்டுப்படுத்த உதவும். வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிப்பது உடலை சமநிலையில் வைக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் எலுமிச்சை ஜூஸ் உதவும். எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். எலுமிச்சை ஜூஸ் உடலில் பிஹெச் அளவை சமநிலையில் வைக்கவும் பெரிதும் உதவும். தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்பட விட்டமின் சி மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக சூடாக்கவேண்டும். பின்னர் லேசாக ஆறியதும் அதில் எலுமிச்சை ஜூஸை கலந்து குடிக்கலாம். காலை உணவு சாப்பிட்ட பின்பு எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நல்லது. அதைப்போல் மதிய உணவு சாப்பிட்ட பிறகும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.