Immunity Boosting Soup

0
288
Immunity Boosting Soup

உடலை நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை (Immunity Boosting Foods)எடுத்துக்கொள்ள வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் ஒரு சூப் (Lemon Soup) எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

Immunity Boosting Soup

 எலுமிச்சை பழத்தோல் சூப் Lemon Soup:

 தேவையானவை:

எலுமிச்சை பழத்தோல்- மூன்று துண்டுகள்

இஞ்சி- சிறிய துண்டு

மஞ்சள் தூள்- சிறிதளவு

நல்ல மிளகு- 2

பூண்டு- ஒன்று

லவங்கப்பட்டை- சிறிய துண்டு

 செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.பின்னர் எலுமிச்சை பழத்தோல் சேர்க்க வேண்டும்.இஞ்சியை தட்டி சேர்க்க வேண்டும்.பின்பு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.பின்பு நல்ல  மிளகை  தட்டி சேர்க்க வேண்டும்.பின்பு பூண்டு மற்றும் இலவங்கப்பட்டையை சேர்க்க வேண்டும்.இவை அனைத்தையும் நன்கு கொதிக்க விட வேண்டும்.இரண்டு கப் தண்ணீர் ஆனது ஒரு கப் தண்ணீராக மாறும்வரை கொதிக்கவிடவும்.பின்பு வடிகட்டவும்.எலுமிச்சை பழத்தோல் சூப் ரெடி.

Immunity Boosting Soup

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here