Grey Hair:
நரைமுடியை(Grey Hair) கருப்பாக பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பழைய காலங்களில் 60 வயதிற்கு மேல்தான் நரைமுடி ஏற்படும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதிலேயே நரைமுடி ஏற்படுகிறது. நரைமுடி ஏற்பட்டாலே வயதான தோற்றம் அடைந்து விட்டோம் என்று பலரும் கவலை கொள்கின்றனர்.நரைமுடிக்கு பலவிதமான ஹேர் டை கடையில் கிடைக்கின்றது. பெரும்பாலும் அவற்றில் கெமிக்கல் சேர்த்து செய்யப்படுகிறது. இயற்கையாக உள்ள ஹேர் டை பயன்படுத்தும் போது முடிக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.நரை முடியை கருப்பாக மாற்ற இந்த மருதாணி அவுரிப்பொடி ஹேர் டை பெரிதும் உதவும்.
மருதாணி அவுரி ஹேர் டை(Henna Indigo Hair Dye)
மருதாணி அவுரி ஹேர் டை கூந்தலுக்கு அடர் கருப்பு நிறத்தை கொடுக்கும்.மருதாணி(Henna) மற்றும் அவுரி(Indigo) இரண்டையும் சேர்த்து பயன்படுத்தக்கூடாது. இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் பழுப்பு நிறம் தான் கிடைக்கும்.முதலில் மருதாணியை பயன்படுத்த வேண்டும், பின்னர் தான் அவுரி பயன்படுத்த வேண்டும்.மருதாணி அவுரி ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.
தேவையானவை:
மருதாணி- 100 கிராம்
அவுரி பொடி – 100 கிராம்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
உப்பு -1 ஸ்பூன்
சோள மாவு – 2 ஸ்பூன்
செய்முறை:
ஸ்டெப் 1:
மருதாணிப் பொடியுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு கொண்டு வர வேண்டும். இந்த மருதாணி கலவையை இரும்புச் சட்டியில் வைத்து ஊற வைக்கலாம். இந்த மருதாணி கலவையை இரவு முழுவதும் வைத்து மறுநாள் காலையில் எடுத்து பயன்படுத்தலாம். இந்த மருதாணி கலவையை தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும். பின்னர் இரண்டு மணி நேரம் கழிந்த பின் முடியை அலச வேண்டும். தலையை அலசும்போது ஷாம்பு பயன்படுத்தக்கூடாது.
ஸ்டெப் 2:
அவுரி பொடியுடன் உப்பு மற்றும் சோள மாவு , சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் பதத்துக்கு கொண்டு வர வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும். பின்னர் இரண்டு மணி நேரம் கழிந்த பின் தலையை அலச வேண்டும். தலையை அலசும்போது ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்.
மேலே சொன்ன இந்த இரண்டு ஸ்டெப் களை செய்யும் போது நரைமுடி கருமையாக மாறும். இவ்வாறு மருதாணி மற்றும் அவுரியை பயன்படுத்தி
நரைமுடியை(Grey Hair) இயற்கையான முறையில் கருமையாக மாற்றலாம்.
குறிப்பு:
அவுரியை தலைக்கு பயன்படுத்தும் முன்பு கையில் சிறிதளவு தடவி அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை அறிந்தபின் தலைக்கு பயன்படுத்துவது நல்லது.