முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற:
சில பெண்களுக்கு முகத்தில் முடி(Facial Hair) வளர்ந்து பார்ப்பதற்கு அழகின்றி முகம் காணப்படும். முகத்தில் உள்ள முடிகளை அகற்ற பலவகையான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். கெமிக்கல் கலந்த க்ரீம் போன்றவற்றையும் பயன்படுத்தி முடியை நீக்க முயற்சி செய்து வருகின்றனர்.
முகத்தில் முடி வளர காரணம்:
உடலில் சுரக்கும் ஹார்மோன் மாற்றங்களால் தான் முகத்தில் முடி(Facial Hair) வளர்கிறது. ஆண்களுக்கு சுரக்கும் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் பெண்களுக்கு அதிகமாக சுரப்பதால் தான் உடலில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.
-
பயிற்ற மாவு:
பயிற்ற மாவு, கஸ்தூரி மஞ்சள், குப்பைமேனி, வேப்பிலை பொடி ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.
2.எலுமிச்சை:
எலுமிச்சைச்சாறு இயற்கையாக முகத்தை பிளீச்சிங் செய்ய உதவும். கடலை மாவு, கோதுமை மாவு, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை முகத்தில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.
-
சர்க்கரை:
சர்க்கரையுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.
-
பார்லி:
பார்லி பொடியுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.
-
சோள மாவு:
சிறிதளவு சோள மாவுடன், முட்டையின் வெள்ளைக்கரு, சிறிதளவு சர்க்கரை கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.
மேலே சொன்ன இந்த குறிப்புகளை பயன்படுத்தும்போது இயற்கையான முறையில் முகத்தில் உள்ள முடிகளை நீக்கலாம்.