வழுக்கை ஏற்படாமல் தடுக்கும் உணவுகள்:
தலையில் வழுக்கை(Baldness) ஏற்படுதல் இன்று பெரும்பாலோருக்கு இருக்கக்கூடிய பெரிய பிரச்சினையாகும். பழைய காலங்களில் முன்னோர்கள் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை மட்டுமே தலை முடிப் பராமரிப்புக்கு பயன்படுத்தினர். ஆனால் தற்போது செயற்கையான ஷாம்பு மற்றும் செயற்கையான க்ரீம்களை தலைக்கு பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இளம் வயதிலேயே முடி நரைத்தல், வழுக்கை ஏற்படுதல், முடி உதிர்தல் போன்றவை தோன்ற ஆரம்பிக்கின்றன.வழுக்கை ஏற்படாமல் தடுக்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.
பாதாம்:
பாதாம் முடி வளர்ச்சியில்(Hair Growth) முக்கிய பங்கு வைக்கிறது. தினமும் ஐந்து பாதாமை நீரில் ஊறவைத்து தோலை நீக்கி சாப்பிட வேண்டும். பாதாமை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு முடி வளர்ச்சி அதிகமாகும். மேலும் பாதாமை சாப்பிட்டு வந்தால் தலையில் வழுக்கை(Baldness) ஏற்படாமலும் தடுக்கலாம்.
கீரைகள்:
இரும்புச்சத்து குறைவு காரணமாக முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. கீரையில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு , தலையில் வழுக்கை ஏற்படாமலும் தடுக்கலாம்.
நெல்லிக்காய்:
நெல்லிக்காய் தலையிலுள்ள மயிர்கால்களை வலுப்படுத்த பெரிதும் உதவும். நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வை தடுக்கபட்டு முடி நன்றாக வளரும். நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இளநரை ஏற்படாமல் தடுக்கலாம்.நெல்லிக்காய் சாப்பிட்டு வர தலையில் ஏற்படும் வழுக்கை(Baldness) நீங்கும்.
வெங்காயம்:
வெங்காயம் முடி உதிர்வை தடுக்க பெரிதும் உதவும். வெங்காயத்தை எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக வளரும்.
வெங்காயத்தை தலைக்கு பயன்படுத்தி வர முடி உதிர்வது தடுக்கப்பட்டு தலையில் ஏற்படும் வழுக்கை மறையும். தலையில் புதிய முடிகள் வளர வெங்காயம் பெரிதும் உதவும்.
கறிவேப்பிலை:
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் முடி உதிர்வை தடுக்க கூடிய தன்மை உடையது. கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் முடி உதிர்வு மற்றும் தலையில் ஏற்படும் வழுக்கை போக்க பெரிதும் உதவும். கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் கூந்தல் கருமையாக வளரும்.இளநரையை தடுக்கவும் கறிவேப்பிலை பெரிதும் உதவும். கறிவேப்பிலை எண்ணெய்யை தலைக்கு தேய்த்து வர முடி வளர்ச்சி(Hair Growth) அதிகரிக்கும்.
தேன்:
தேன் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் முடி உதிர்வை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. தலையில் ஏற்படும் வழுக்கையை தடுக்க தேன் பெரிதும் உதவும்.
வெந்தயம்:
வெந்தயத்தில் உள்ள இரும்பு மற்றும் பொட்டாசியம் சத்து முடி உதிர்வை தடுப்பதோடு மட்டுமல்லாமல் இளநரை ஏற்படாமல் தடுக்கும் உதவும்.வெந்தயம் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும்.
திரிபாலா:
நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகியவற்றின் கலவைதான் திரிபாலா. திரிபலா சூரணத்தை பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு முடி நன்றாக வளரும்.மேலும் தலையில் வழுக்கை ஏற்படாமல் தடுக்க திரிபாலா பெரிதும் உதவும்.