சானிடைசர்(Sanitizer) என்பது கைகளில் இருக்கும் கிருமிகளை அழிக்க உதவும் கிருமி நாசினி.சானிடைசர் பயன்படுத்தி நாம் கைகளை கழுவும் போது அந்த சானிடைசர் கைகளில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் கூடவே கைகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் அழித்துவிடுகிறது.மேலும் கெமிக்கல் கலந்த Hand Sanitizer பயன்படுத்தும் போது கைகளை கழுவிய பின்பு கைகளில் இருக்கும் கெமிக்கல்,கைகளால் உணவு சாப்பிடும்போது வயிற்றுக்குள் சென்று உடலுக்கு தீங்கு தரும்.குழந்தைகள் இந்த Hand Sanitizer பயன்படுத்தி கைகளை கழுவிய பின்பு அவர்கள் அந்த கையை வாயில் வைத்தால் கைகளில் இருக்கும் கெமிக்கல் வயிற்றுக்குள் சென்று குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சினைகளைக் கொடுக்கும்.
Natural Hand Sanitizer:
இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு Hand Sanitizer செய்யும்போது அது உடலுக்கு எந்தத் தீங்கும் தராது.கற்றாழை மற்றும் மஞ்சளில் உள்ள ஆண்டிபயாடிக் தன்மை நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி Hand Sanitizer தயாரிக்கலாம்.இப்ப கற்றாழை Hand Sanitizer எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
Aloevera Hand Sanitizer :
தேவையான பொருள்கள்:
கற்றாழை(Aloevera) – மடல் ஒன்று
மஞ்சள்(Turmeric)-1/4 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் கற்றாழையை(Aloevera) எடுத்து Clean செய்து உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
- அப்புறம் ஜெல்லை எடுத்து மிக்ஸி ஜாரில் எடுத்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அப்புறம் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.ரொம்ப கட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம். இயற்கையான Hand Sanitizer ரெடி.