Table of Contents
ரோஜா குல்கந்த் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
ரோஜா தலையில் வைப்பதற்கு மட்டுமல்லாமல், சருமத்துக்கும், கூந்தலுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது.
ரோஜா குல்கந்து செய்முறை:
ரோஜா குல்கந்து(Gulkand)என்பது ரோஜா மலரில் இருந்து தயாரிக்கப்படும் மருத்துவ தன்மையுடைய பொருளாகும். இது இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டிருக்கும்.
தேவையானவை:
பன்னீர் ரோஜா பூ – 30 பூக்கள்
பெரிய கற்கண்டு – 100 கிராம்
தேன் – 100 கிராம்
செய்முறை:
ரோஜா இதழ்களை தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.பின்னர் தண்ணீர் இல்லாமல் உலரும் வரை வைக்கவும்.பின்னர் ரோஜா இதழ்களையும் கற்கண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளவும்.அதில் அரைத்த விழுது கொஞ்சம் சேர்க்கவும்.பின்னர் தேன் சேர்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அரைத்த விழுது மற்றும் தேனை சேர்க்க வேண்டும்.பின்னர் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்தால் ரோஜா குல்கந்த் கிடைத்துவிடும்.குல்கந்து தயாரிக்கும்போது தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.குல்கந்து செய்ய பயன்படுத்தும் ரோஜா இதழ் நாட்டு ரோஜாவாக இருக்க வேண்டும்.
வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரோஜா குல்கந்து(Gulkand) சாப்பிடலாம்.பெரியவர்கள் இரண்டு ஸ்பூன் அளவு மற்றும் குழந்தைகள் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிடலாம்.
ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1.மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய குல்கந்து பெரிதும் உதவும்.
2.வயிற்றுப் பிரச்சனை,வாயுக் கோளாறுகள்,வயிற்றுப்புண் ஆகிய பிரச்சனைகளை சரிசெய்ய ரோஜா குல்கந்து உதவும்.
- பசியின்மை பிரச்சனையை சரி செய்யவும் குல்கந்து உதவும். குல்கந்து குழந்தைகள் கொடுப்பதன் மூலம் நன்றாக பசி எடுத்து குழந்தைகள் சாப்பிடுவார்கள்.
4.பித்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய குல்கந்து உதவும்.
5.பெண்களுக்கு வெள்ளைப்படுதல், மாதவிடாய் வயிறு வலி இவற்றை சரிசெய்ய குல்கந்து பெரிதும் உதவும்.
6.இதயம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க குல்கந்து உதவும்.
7.மன அழுத்தத்தை போக்கும் குல்கந்து பெரிதும் உதவும்.
8.தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு குல்கந்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.
9.குல்கந்து சரும சுருக்கங்கள் வரவிடாமல் தடுத்து சருமம் இளமையான தோற்றத்துடன் இருக்க உதவும்.