தற்போது சமூக வலைத்தளங்களில் டல்கோனா காபி(Dalgona Coffee) வைரலாகி வருகிறது.பீட்டன் காபி(Beaten Coffee) தான் தற்போது டல்கோனா காபி என்ற பெயரில் வைரலாகி வருவதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.எப்போதும் சூடான காபி தான் குடிக்கிறோம், இந்த டல்கோனா காபி சூடாக இல்லாமல் வெயில் காலத்தில் குடிப்பதற்கு ஏதுவாக ஜில்லுனு இருக்கும் காபி.
டல்கோனா காபி செய்வது எப்படி? How To Make Dalgona Coffee:
டல்கோனா காபி(Dalgona Coffee) செய்வது மிகவும் எளிது.வீட்டில் இருக்கும் பொருட்களைக்கொண்டு இந்த காபியை எளிதாக தயாரிக்கலாம்.
தேவையானவை:
பால்(Milk) – 3/4 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள்(Instant Coffee Powder) – 2 ஸ்பூன்
சர்க்கரை(Sugar) – 3 ஸ்பூன்
சுடு தண்ணீர்(Hotwater) – 2 ஸ்பூன் (மிதமான சூட்டில்)
ஐஸ்கட்டி(Ice cubes) – (2-3) கட்டிகள்
செய்முறை:
முதலில் பாலைக் காய்ச்சி ஆறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.பின்பு அந்த பாலை குளிர்சாதனப் பெட்டிக்குள் குளிர வையுங்கள்.பின்பு ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்தக் கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் காபித் தூளை சேர்க்கவும்.பின்னர் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். மேலும் ரெண்டு ஸ்பூன் லேசான சூட்டில் இருக்கும் வெந்நீரை சேர்க்க வேண்டும்.மூன்றையும் சேர்த்து ஒரு ஸ்பூன் பயன்படுத்தி நன்றாக அடித்து கலக்க வேண்டும்.மூன்று பொருளும் சேர்ந்து க்ரீமியாக(Cream) வரும் வரைக்கும் நன்றாக அடிக்க வேண்டும்.பத்து நிமிடங்கள் கைவிடாமல் நன்றாக அடித்து கலக்க வேண்டும்.Peanut Butter பதத்திற்கு வரும்வரை நன்றாக அடித்துக் கலக்க வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைத்திருக்கும் பாலை எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு கப்பில் முக்கால் பங்கு அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இரண்டு அல்லது மூன்று ஐஸ்கட்டிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்பு காபி கிரீமை(Beaten Coffee) , அந்தப் பாலின் மேல் சேர்க்க வேண்டும்.இந்த காபி க்ரீம் பாலுடன் கலக்காமல் அப்படியே மேற்பரப்பில் இருக்கும்.இதுதான் டல்கோனா காபி(Dalgona Coffee) .க்ரீமியான கோல்டு காபி ரெடி.
இந்த காபி கிரீமை பாலுடன் கலந்து குடித்தால் சுவையாக ஜில்லென்று இருக்கும்.சம்மர் சீசனில் இந்த காபியை செய்து குடித்து பாருங்கள்.