சிகப்புத் தண்டுக்கீரை(Red Spinach)விதைப்பு முதல் அறுவடை வரை:
கீரை(Spinach) வாரத்திற்கு ஒரு முறை சமைத்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்களை பெற முடியும்.அதனால் வாரத்தில் ஒரு முறை கீரை சாப்பிட வேண்டும்.ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையான கீரை சாப்பிடுவதன் மூலம் எல்லாச் சத்துக்களையும் பெறலாம்.மேலும் மாடி அல்லது வீட்டு தோட்டத்தில் கீரையை வளர்ப்பதன் மூலம் கெமிக்கல் இல்லாத கீரையை சாப்பிடலாம்.அதனால் கீரையின் சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.சிகப்புத் தண்டுக்கீரை(Red Spinach) விதைப்பு முதல் அறுவடை வரை பார்க்கப் போறோம்.
சிகப்புத் தண்டுக்கீரை விதைப்பு How to Grow Red Spinach?
சிகப்புத் தண்டுக்கீரைRed Spinach) நடுவதற்கு ஒரு அகலமான தொட்டி அல்லது டப் எடுத்துக் கொள்ளவும்.அதில் கோகோ பீட், மண், சாணி உரம், கடலைப்புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு எல்லாத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.அதன் பிறகு சிகப்புத் தண்டுக்கீரை விதைகளை அதில் தூவுங்கள்.சிகப்புத் தண்டுக்கீரை விதை போட்ட 15 நாட்களிலேயே அறுவடை செய்து விடலாம்.மூன்று நாட்களிலேயே விதை முளைத்து கீரை வளர ஆரம்பிக்கும்.15 நாட்களிலேயே கீரையை அறுவடை செய்யணும். இல்லாவிடில் கீரைத்தண்டு முற்றிப் போகும்.கீரை விதை போட்டு 15 நாட்களில் கீரையை வேரோடு பிடுங்கி எடுக்கலாம் அல்லது வேருக்கு மேலே உள்ள பாகத்தை மட்டும் வெட்டி எடுக்கலாம்.அவ்வாறு செய்வதன் மூலம் கீரையானது திரும்பவும் இந்த பாதி தண்டிலிருந்து வளர ஆரம்பிக்கும்.இவ்வாறு எளிதான முறையில் கீரை விதைத்து அறுவடை செய்து கீரை சாப்பிடலாம்.
வீட்டில கீரை வளர்ப்பதால் ஆர்கானிக் முறையில் பிரஷ்ஷான கீரையை பறித்து சமைத்து சாப்பிடலாம்.அதனால் கீரையில் உள்ள சத்துக்களும் முழுமையாக கிடைக்கும்.