திராட்சைச் செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு:
வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டத்தில்(Terrace Garden) திராட்சைச் செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி பார்ப்போம்.மாடி அல்லது வீட்டு தோட்டத்தில் திராட்சைச் செடி(Grapes plant) வளர்க்க வேண்டும் என்று பலர் ஆசைப்படுவர்.வீட்டிலே திராட்சைச் செடி வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் திராட்சைப் பழங்களை சாப்பிடுவது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
திராட்சைச் செடி நடுதல்:
திராட்சை செடியை(Grapes plant) மண்தரையில் நடலாம்.அப்படி மண் தரை இல்லாதவர்கள் மாடித்தோட்டத்தில் எப்படி வளர்க்கலாம் என்று பார்ப்போம்.மாடி தோட்டத்தில் வளர்க்கும் போது கோகோபித்(Cocopeat) பயன்படுத்தி மண் கலவை தயாரிக்கலாம்.மாடித்தோட்டத்தில்(Terrace Garden) திராட்சைச் செடிக்கு கோகோபித் பயன்படுத்தி மண் கலவை தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.
திராட்சைச் செடிக்கு கோகோபித் பயன்படுத்தி மண் கலவை தயாரிக்கும் முறை:
முதலில் கோகோபித் Bar எடுத்து தண்ணீர் ஊற்றி மண் கலவை பதத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.பிறகு கோகோபித் உடன் மண்புழு உரம், சிறிதளவு மண், வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை நன்றாகக் கலந்து கலவையை ரெடி செய்து கொள்ளுங்கள்.அதன் பிறகு தொட்டியில் அந்த மண் கலவையை போடவும்.பிறகு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் திராட்சைச் செடியை நடுங்கள்.
திராட்சைச் செடிக்கு கொடுக்கக்கூடிய உரங்கள்:
திராட்சை செடிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகாவியா பயன்படுத்துங்கள்.மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கடலைப் பிண்ணாக்கு உரமாக கொடுக்கலாம்.பின்னர் 15 நாட்களுக்கு ஒரு முறை சாணி உரத்தை எடுக்கலாம்.இப்படியாக 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில் மேற்சொன்ன உரங்களை பயன்படுத்தலாம்.திராட்சை செடியானது நன்றாக செழித்து வளரும்.ருசியான திராட்சைப் பழங்களையும் பெறலாம்.வீட்டிலேயே திராட்சை செடியை வளர்த்ததால் சுத்தமான வேதிப்பொருட்கள் இல்லாத ஆர்கானிக் திராட்சை பழங்களை சாப்பிடலாம்.மேலும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்