பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறத்தை(Yellow Teeth) போக்க பல்வேறு வழிகளை மேற்கொள்கின்றனர். மஞ்சள் நிற பற்கள் பெரும்பாலோருக்கு இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சினை. பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறத்தை போக்க பழங்களை சாப்பிட்டு நீக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறத்தை நீக்கலாம்.
Table of Contents
1. ஆப்பிள்:
ஆப்பிள் பழம் ஸ்க்ரப்பராக செயல்பட்டு பற்களில் உள்ள கறையை நீக்க உதவும். ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் பற்கள் பளிச்சென்று மாறும். ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் உமிழ்நீரை உருவாக்கி ,பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை(Yellow Teeth) நீக்க உதவும்.
2. வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறத்தை நீக்க உதவும். மேலும் பற்களை பளபளப்பாக மாற்றவும் வாழைப்பழம் பெரிதும் உதவும்.
3. ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளது. ஆரஞ்சு பழம் ஈறுகள் மற்றும் பற்களை பாதுகாக்க பெரிதும் பயன்படும். மேலும் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறத்தை(Yellow Teeth) போக்கவும் உதவும்.
4. தர்பூசணி:
தர்பூசணி பழத்தில் பொட்டாஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், அயோடின் போன்ற சத்துக்கள் உள்ளன. தர்பூசணி பழம் பற்களின் பிரகாசத்தை பாதுகாக்க பெரிதும் உதவும். மேலும் பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை போக்கவும் பெரிதும் பயன்படும்.
5. ஸ்டாபெரி:
ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள மாலிக் அமிலம் பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை போக்க பெரிதும் பயன்படும். மேலும் பற்களை பளபளப்பாக வைக்கவும் ஸ்ட்ராபெரி பழம் உதவும்.
மேலே சொன்ன இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தை நீக்கமுடியும்.