ஸ்ப்ளிட் எண்டு(split end) என்னும் நுனி முடி பிளவு காரணமாக முடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.வறண்ட முடி மற்றும் முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் நுனி முடி பிளவு ஏற்படுகிறது.ஹேர் டிரையர் பயன்படுத்துவது, கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் போன்றவற்றாலும் நுனி முடி பிளவு ஏற்படும்.ஸ்ப்ளிட் எண்டு(split end) சரி செய்ய உதவும் ஹேர் பேக்ஸ் பற்றி பார்க்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்:
ஆப்பிள் சீடர் வினிகரில் இருக்கும் அசிட்டிக் அமிலம் முடியில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முடி நன்றாக வளர உதவும்.ஒரு கப் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீருடன் கலந்து தலையை அலச வேண்டும்.வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வர முடி பிளவு பிரச்சனை சரியாகும்.இதனால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு முடி அடர்த்தியாக வளரும்.
முட்டை மற்றும் தேன் ஹேர் மாஸ்க் :
தேன் தலையிலுள்ள வறட்சியை தடுக்க உதவும்.முட்டையில் புரதச்சத்து அதிகளவில் உள்ளது.முட்டை தலைமுடியை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.இந்த கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும்.இவ்வாறு செய்து வர நுனி முடி பிளவு(split end) சரியாகும்.
தயிர் மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மாஸ்க்:
ஆலிவ் எண்ணெயில் உள்ள கொழுப்பமிலங்கள் வறண்ட முடியை சரி செய்து முடிக்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது.தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் தலையிலுள்ள இறந்த செல்களை நீக்கி புதிய முடி வளர பெரிதும் உதவும்.அரை கப் தயிருடன் இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.பின்பு இந்த கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு ஏற்ற சிறந்த எண்ணெயாகும்.தினமும் தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும் கருமையாக வளரும்.தேங்காய் எண்ணையை தலைக்கு தேய்த்து குளித்து வர நுனி முடி பிளவு பிரச்சனை சரியாகும்.