Table of Contents
வேப்பிலையின் நன்மைகள்:
வேப்பிலை(neem) பல்வேறு மருத்துவத் தன்மைகளை உடையது.வேப்பிலையில் மருத்துவத்தன்மை மட்டுமன்றி அழகைப் பராமரிக்கவும் உதவும்.வேப்பிலை பாக்டீரியா எதிர்ப்பு தன்மை மற்றும் அலர்ஜி எதிர்ப்பு தன்மை முகத்தில் பருக்கள்(pimples) ஏற்படாமல் தடுக்க உதவும்.வேப்பிலையில் உள்ள கொழுப்பமிலங்கள் மற்றும் விட்டமின் சி முகத்தை ஈரப்பதத்துடன் வைப்பதற்கும், உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.வேப்பிலை சருமத்தைப் பொலிவுடன் வைக்க பெரிதும் உதவும்.சூரிய ஒளி பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க வேப்பிலை உதவும்.
முகபருவுக்கு வேப்பிலை பேஸ் பேக்(Neem face pack for pimples):
தேவையானவை:
வேப்ப இலைகள் -10
கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வேப்பிலைகளை நன்றாக கழுவ வேண்டும்.பின்பு மிக்ஸி ஜாரில் வேப்பிலைகளை(pimples) போட்டு நன்றாக அரைக்கவும்.பின்னர் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக அரைக்கவும்.பின்பு அந்த கலவையுடன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.இந்த பேஸ்டை முகத்தில் தேய்க்கவும்.பின்னர் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்து வர முகத்தில் உள்ள பருக்கள்(pimples) நீங்கும்.