Skip to content

How To Get Rid Of Lice Naturally In Tamil

Top 5 Home Remedies For Lice Problem In Tamil

தலையில் இருக்கும் பேன் (Lice)தொல்லையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தலையில் ஏற்படும் பொடுகை தொடர்ந்து பேன் தொல்லை உண்டாகும். தலையில் பேன் தொல்லை ஏற்பட்டால் அதை விரட்டுவது மிகவும் கடினமான ஒன்று.பேன்  பிரச்சனை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டது.  பேன் தொல்லையின் காரணமாக அடிக்கடி சொரிந்து கொண்டே இருப்பது,  பேன் தொல்லை இருப்பவரை அழகற்ற வராக காட்டும். கெமிக்கல் கலந்த ஷாம்புவை போட்டாலும் தலையிலிருந்து பேன் தொல்லை போகாது. பேன்  தொல்லை இருப்பவர் பயன்படுத்தும் சீப்பு, டவல் மற்றும் அவர் பக்கத்தில் உறங்குவது போன்ற காரணங்களால்  பேன் தொல்லை மற்றவர்களுக்கும் பரவுகிறது.  பேன் தொல்லை காரணமாக அடிக்கடி தலையைச் சொறியும் போது தலையில் சொறிந்து சொறிந்து புண் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பேன்(Lice)தொல்லை பிரச்னை காரணமாக முடி வளர்ச்சியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இயற்கையான முறையில் தலையிலுள்ள பேன்களை அகற்றுவது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.

1.சீதாப்பழக் கொட்டைகள்:

சீத்தாப்பழம் கிடைக்கும்போது அதன் பழங்களை வாங்கி சாப்பிட்டு பின்னர் அதன் கொட்டைகளை எடுத்து சேமித்து வைக்கவேண்டும். பின்னர் வெயிலில் உலர்த்த வேண்டும். பின்னர் அவற்றை பொடியாக நன்றாக அரைக்க வேண்டும். அந்தப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடாக்கி, பின்னர் ஆறவைத்து அந்த எண்ணெய்யை தலையில் தேய்க்கலாம். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர பேன் தொல்லை முற்றிலும் நீங்கும்.

How To Get Rid Of Lice Naturally In Tamil

2.வேப்பிலை:

வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, அந்த தண்ணீரை கொண்டு தலையை அலசி வந்தால் பேன் (Lice) தொல்லை நீங்கும். வேப்பிலையில் உள்ள கசப்புத்தன்மை பேன்களை அகற்றும் தன்மை கொண்டது.மேலும் பொடுகு பிரச்சினையும் சரியாகும்.

How To Get Rid Of Lice Naturally In Tamil

3.வெந்தயம் :

இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் வெந்தயத்தை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெந்தயக் கலவையுடன் தேங்காய்ப்பால் சிறிதளவு கலந்து தலையில் தேயுங்கள். தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலையை அலசுங்கள். இவ்வாறு செய்து வர பேன் தொல்லை நீங்கும்.

How To Get Rid Of Lice Naturally In Tamil

4.பூண்டு :

பூண்டு மணம் பேன்களுக்கு பிடிக்காது. பூண்டு பேன்களை அழிக்கும் தன்மை கொண்டது. சிறிதளவு பூண்டுகளை எடுத்து தோல் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும். தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர பேன்தொல்லை நீங்கும்.

How To Get Rid Of Lice Naturally In Tamil

5. சின்ன வெங்காயம்:

சின்ன வெங்காயத்தை சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிகட்டி வெங்காயச் சாற்றை தனியாக எடுத்துக் கொள்ளவும். அதன்பின்பு வெங்காயச் சாற்றை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு செய்து வர தலையில் உள்ள பேன் நீங்கும்.

How To Get Rid Of Lice Naturally In Tamil

6. பாதாம்:

How To Get Rid Of Lice Naturally In Tamil

பாதாம் பருப்பு ஊறவைத்து பின்னர் அதை நன்றாக அரைத்து பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் எலுமிச்சைச்சாறு சிறிதளவு சேர்க்க வேண்டும். பின்னர் இந்த கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து, தலையை அலசலாம். இந்த முறையை பின்பற்றி வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும். பாதாம் முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

 

மேலே சொன்ன இந்த முறைகளை பின்பற்றி வந்தால் பேன் தொல்லை நீங்கும். வாரம் ஒரு முறை இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால் தலையிலுள்ள பேன்கள் நீங்கி முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.

Recommended Articles:

Onion hair oil for Hair growth

Benefits of Aloevera For Hair growth

15 Amazing Tips For Grey Hair

Top 5 Hair Growth Herbs

Best food for winter season in India

Amazing Health Benefits Of Honey

Figs: Nutrition and 15 amazing health Benefits

Health Benefits Of Spinach

Health Benefits of Aavarampoo

Top 10 Vegetables That Are High in Vitamin C

Amazing Benefits Of Nilavembu Kashayam

Potato For Skin Whitening

Top10 VitaminC Rich Fruits

Spices For Weight Loss in Tamil

How To Use Henna and Indigo as Natural Hair Dye in Tamil

Vitamin D Rich Foods

7 Foods For Glowing skin in Tamil

10 Home Remedies for Hair Growth in Tamil

How To Prevent Baldness in Tamil

Leave a Reply

Your email address will not be published.