தலைவலியை இயற்கையாக சரி செய்வது எப்படி?
தலைவலி(Headache) பொதுவாக எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை. சோர்வு, மன அழுத்தம், நீண்ட நேரம் போன் அல்லது லேப்டாப் பார்ப்பது போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படலாம்.தலைவலியைப் போக்க தலைவலி மாத்திரைகளை சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல.வீட்டு வைத்தியங்கள் இயற்கையாகவே தலைவலியை சரிசெய்ய உதவும். அவ்வகையில் Essential oil பயன்படுத்தி தலைவலியை சரி செய்வது இயற்கையான முறைகளில் ஒன்று.Essential oil பலவகையான நன்மைகளை தரக்கூடியது.Essential oil ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அழகு சார்ந்த நன்மைகளையும் தரக்கூடியது. தலைவலியை சரிசெய்ய Essential oil பயன்படுத்தலாம். தலைவலியை(Headache) குறைக்க இயற்கையான முறையில் பயன்தரக்கூடிய Essential oil பற்றி இப்போது பார்க்கலாம்.
-
லாவண்டர் எண்ணெய்:
லாவண்டர் எண்ணெய் பொதுவாக சருமத்தின் அழகைப் பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. லாவண்டர் எண்ணெய் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவும். ஒற்றை தலைவலியை சரிசெய்ய இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
-
யூகலிப்டஸ் எண்ணெய்:
யூகலிப்டஸ் எண்ணெய் பல நன்மைகளைத் தருகிறது. யூகலிப்டஸ் எண்ணெய் கிருமிநாசினியாக பயன்படுகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க யூக்கலிப்டஸ் எண்ணெய் பெரிதும் உதவும். சளி மற்றும் புண்களை ஆற்றவும் யூகலிப்டஸ் எண்ணெய் பயன்படும். யூகலிப்டஸ் எண்ணெய் சைனஸ் பிரச்சனையை சரி செய்யவும் பெரிதும் உதவும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் இந்த எண்ணெய் பெரிதும் உதவும். இந்த எண்ணெய் பயன்படுத்துவதால் தலைவலி(Headache) பிரச்சினை நீங்கும்.
-
சாமந்திப்பூ எண்ணெய்:
சாமந்தி பூ எண்ணெய் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இந்த எண்ணெய் அஜீரணம், குமட்டல், வீக்கம் மற்றும் தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் உதவும். இந்த எண்ணெய் தூக்கத்தை ஊக்குவிக்க பெரிதும் பயன்படுகிறது. சாமந்திப்பூ எண்ணெய் தலைவலி, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க பயன்படுத்தலாம். சாமந்திப்பூ தேனீர் குடிப்பது உடல் மற்றும் மனதிற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.
-
பெப்பர்மின்ட் எண்ணெய்:
பெப்பர்மின்ட் எண்ணெய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பெப்பர்மின்ட் எண்ணெய் தலைவலி, தசை வலி, அரிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளை போக்க பெரிதும் உதவும். பெப்பர்மின்ட் எண்ணெய் குளிர்ச்சித் தன்மை கொண்டது.
Essential oil எவ்வாறு பயன்படுத்துவது?
Essential oil சருமத்தில் நேரடியாக பயன்படுத்தக்கூடாது.Essential oil பயன்படுத்தும்போது ஏதாவது ஒரு எண்ணெயுடன் கலந்து பண்படுத்த வேண்டும். இந்த கலவை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம்.Room Freshner அல்லது குளிக்கும் போது தலையில் தேய்க்கும் எண்ணெயிலும் சில துளிகள் Essential oil சேர்க்கலாம்.