உங்கள் ஆதார் நம்பரில் வேறு யாரேனும் சிம் கார்டு வைத்து இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பது எப்படி?
ஆதார் எண்ணை(aadhaar card) ஜெராக்ஸ் எடுக்க, நண்பர்களுக்கு அனுப்ப,வங்கி தேவைகளுக்கு வழங்க என பல தேவைகளுக்கு நாம் மற்றவர்களிடம் வழங்குகின்றோம்.அப்படி அதை நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் போது அவர்களுக்கும் நம்முடைய ஆதார் எண் தெரிந்துவிடும்.அப்படி தெரியும்போது அதை வைத்து உங்கள் பெயரில் யாரேனும் சிம் கார்டு வாங்கலாம்.அதை தடுப்பதற்கு இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.அந்த இணைய தளத்திற்கான முகவரி tafcop.dgtelecom.gov.in இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தால் உங்களுக்கு தெரியாமல் உங்கள் ஆதார் எண்ணை(aadhaar card) பயன்படுத்தி யாரேனும் சிம் கார்டுகளை வைத்துள்ளார்களா என்பதை கண்டுபிடிக்கலாம்.இது இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள ஒரு சேவையாகும்.இப்போது இந்த இணைய தளத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
உங்கள் பெயரில் எத்தனை மொபைல் எண்கள் இருக்கின்றன என்பதை சரிபார்க்கும் வழிமுறைகள்:
- TAF COP consumer portal என்ற இணையதளத்தில் சென்று அங்கு உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
- அடுத்து ‘Request OTP ‘ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு 6 இலக்க OTP அனுப்பப்படும்.
- அடுத்ததாக OTP ஐ பதிவு செய்து ‘Validate‘ என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்ததாக உங்கள் அடையாள அட்டை சான்றுக்கு வழங்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியலை உங்களுக்கு காட்டும்.
- உங்களுக்கு சொந்தமில்லாத மொபைல் எண்களை நீங்கள் தேர்ந்தெடுத்து புகார் அளிக்க ‘submit‘ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.