கழுத்து கருமை நீங்க (Remedy for Neck Darkening):
பெண்களில் பெரும்பாலோனோருக்கு கழுத்தைச் சுற்றி கருமை நிறம் காணப்படும். உடல் வெப்பம், நகைகள் அணிவது, அலர்ஜி காரணமாக கழுத்தைச் சுற்றி கருமை நிறம் தோன்றும். வீட்டில் இருக்கும் பொருட்களைக்கொண்டு கழுத்தை சுற்றி இருக்கும் கருமையை நீக்கலாம்.கழுத்தை சுற்றி இருக்கும் கருமையை நீக்க பின்வரும் வழிகளை பின்பற்றலாம்.
1.இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன் எலுமிச்சைச்சாறு அரை டீஸ்பூன், மஞ்சள் அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு அந்த கலவையை கழுத்தைச் சுற்றி கருமையாக இருக்கும் இடங்களில் தேய்க்கவும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து கழுத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு தடவை இந்த பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் கழுத்தில் இருக்கும் கருமை நீங்கும்.
2.உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை நீக்கும் தன்மை உடையது. உருளைக் கிழங்கு அரைத்து சாறெடுத்து கழுத்தில் கருமை உள்ள இடங்களில் தேய்த்து வர கருமை நீங்கும்.
3.ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு தயிர் கலந்து நன்றாக கலக்கவும். பின்பு இந்த கலவையை கழுத்தில் தேய்த்து வர கருமை நீங்கும். வாரத்தில் ஒரு நாள் இவ்வாறு செய்து வர கழுத்தில் இருக்கும் கருமை நீங்கிவிடும்.
4.ஆப்பிள்சீடர் வினிகர் கழுத்தில் உள்ள கருமையை நீக்க உதவும். 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் 4 டீஸ்பூன் தண்ணீர் கலந்து நன்றாக கலக்கவும். பின்னர் காட்டன் பஞ்சை அந்த கலவையில் நனைத்து கழுத்தில் கருமை உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.