செம்பருத்தி(Hibiscus)பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.மருத்துவத்தன்மை மட்டுமன்றி முடி வளர்ச்சியிலும் அழகைப் பராமரிக்கவும் செம்பருத்தி பெரிதும் உதவும்.செம்பருத்தியில் இருக்கும் விட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை தூண்டி முடியை நன்கு வளரச்செய்யும்.செம்பருத்தி முடி உதிர்வை தடுத்து முடி நன்றாக வளர உதவும்.பொடுகு பிரச்சனையை போக்கவும் செம்பருத்தி உதவும்.முடி பட்டு போல் மென்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் செம்பருத்தியை தலைக்கு பயன்படுத்தலாம்.கூந்தல் நீளமாக வளரவும் செம்பருத்தி பயன்படும்.பேன் தொல்லையிலிருந்து விடுபட செம்பருத்தி பெரிதும் உதவும்.முடியின் அடர்த்தி அதிகரிப்பதோடு, கூந்தல் கருமையாக வளரவும் செம்பருத்தி பெரிதும் பயன்படும்.
செம்பருத்தி ஹேர் மாஸ்க்:
தேவையானவை:
செம்பருத்தி இலை- 15
செம்பருத்தி பூக்கள்- 5
செய்முறை:
முதலில் செம்பருத்தி இலை மற்றும் பூக்களை நன்றாக கழுவி எடுக்கவும்.செம்பருத்தி(Hibiscus) பூவில் இருக்கும் மகரந்தத்தை நீக்கிவிட்டு இதழ்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.பின்பு மிக்ஸி ஜாரில் செம்பருத்தி இலை மற்றும் பூக்களை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அந்த கலவையை தலையில் தேய்க்கவேண்டும்.பின்னர் 15 நிமிடங்கள் கழித்து தலையை அலச வேண்டும்.முடி பட்டுபோல் மென்மையாக மாறும்.இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடியானது நீளமாக வளரும்.